பக்கம்:Saiva Nanneri.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. நிறுவப்பட்டன. பிரான்மலையிலுள்ள மங்கை பாகர் திருக் கோயிலில் இவரது பெயரால் திருமண்டபம் ஒன்று காணப்படுகின்றது. பிரான்மலை மடத்தில் திருநாவுக் கரசு பண்டாரம் உள்ளது. திருவதிகையில் பிடாரி கோயிலின் வடக்கிலிருந்த காட்டை அழித்துச் சாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோரைக் குடியேற்றி அதற் குத் திருநாவுக்கரசன் திருவீதி என்ற பெயரினை வழங்கி னர். தெள்ளாறெறிந்த கந்திவர்மன் காலத்திலேயே அப் பர், சம்பந்தர் ஆகியோரது பதிகங்கள் கோயில்களில் பாடப்பட்டன. சோழர் காலத்திலே இவர் உருவம் வழி படப்பட்டு, வழிபாடுகள் கடத்தப்பட்டன. 3. சுநதரர் தமிழிலக்கியம் ஒரு லேவானம். அந்த லேவானத் திலே புதுமை ஒளி பொழியும் சுடர் நட்சத்திரங்கள் பல உண்டு. அத்தகைய சுடர் கட்சத்திரங்களுள் ஒரு நட்சத் திரமே சுந்தரர். தனிப்பாடல்களே மட்டுமே பாடி வந்த தமிழகத்திலே நெஞ்சைச் சூறையாடும் நீண்டதொரு காப் பியம் செய்து அதன் வாயிலாகப் புதுமைக்கு வித்திட்டார் இளங்கோவடிகள். அதுபோல இடைக் காலத்தே இறை வ&னயும் அவன் உறைவிடமாகக் கொண்டொளிரும் திருப் புதிகளையும் மட்டுமே பாடி வந்த காலத்திலே சுந்தரர் தோன்றினர்: சுந்தரத்தமிழில்ை இறைவனேயும் அவன்றன் திருப்பதிகளையும் பாடினர். அத்துடன் கில்லாது, ஊனின உருக்கி உள்ளொளி பெருக்கிடும் சிவானந்தமாய தேனினே மாந்தி, மெய்தான் அரும்பி, விதிர் விதிர்த்து, இறைவனின் விரையார் கழலுக்குத் தம் கைதான் தலை வைத்துக் கண்ணிர் ததும்பி, வெதும்பி, உள்ளம் பொய் தான் தவிர்ந்து, இறைவனேச் 'சய சய' என்று ஏற்றியும் போற்றியும், இறுதியிலே கில்லாவுலகப் புல்லிய வாழ்க் கையை நீத்து, கிலேத்த புகழ்க் கொடை பூண்ட” அப்பர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/99&oldid=730027" இலிருந்து மீள்விக்கப்பட்டது