பக்கம்:Sarangadara.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3rio. சா, தோ. п. ச ல் க த ர ன் (அங்கம்.1 உண்மைதான். நாங்கள் வேட்டையாடப்போகிருேம். தாங் கள் இங்கிருப்பது நியாயமன்று. அடே வேடர்களே, உங்க வரில் இருவர், இவரை நம்முடைய பாளயங்கள் தங்கியிருக் கும் இடத்திற்குக்கொண்டுபோய்ச் சேருங்கள் ஜாக்கிாதை யாக. மற்றவர்களெல்லாம் தென்புறமாகச்சென்று ஏதாவது வனவிலங்குகள் பதுங்கியிருந்தால் எழுப்புங்கள். இரண்டு வேடர்கள் மதுரகவியை மெல்ல அழைத்துப்போகின்றனர்; மற்றவர்கள் எதிர்புறமாய்ப்போய் காட்டைக் கலைக்கின்றனர்.) சுமந்திரா, t மாத்திரம் சென்று இன்று வேட்டையை முடித்துவ, எனக்கேதோ ஒரு விதமாக இருக்கிறது. என்ன, மறுபடியும் அதைப்பற்றியே யோசித்துக்கொண் டிருக்கிறீர் ? அதை மறந்துவிடும், வாரும்.-அதோபாரும் இரண்டு புலிகள் வளையும் வில்லை, தொடும் அம்பை ! (இருவரும் விாைந்துபோகின்றனர்.) நானும் வேட்டையாடப்போகிறேன். அவர்கள் புலிவேட்டை யாடினல் தான் பாளயத்திற்குப்போய் பூனைவேட்டையாட வேண்டும் ஒரு பூனே நான் வைத்திருந்த தேனே யெல்லாம் குடித்துவிட்டது காலை ! (போகிமுன்.) காட்சி முடிகிறது. - இரண்டாம் காட்சி. இடம்-ாத்ளுங்கியின் அந்தப்பு:ாம். காலம்--கால, பத்ளுங்கி மஞ்சத்தின்மீது சயனித்திருக்கிருள். தோழி ஒருபக்கம் நிற்கிருள். அடி, தோழி, சாரங்கதான் வரவைப்பற்றி ஏதாவது ಈLEr சாம் வந்ததா ? இல்லை அம்மா. ஆயினும் தாம் ஏன் விணுகத் துக்கப்படுகி மீர் ? அவர் சுகமாய்ச் சீக்கிரம் திரும்பி வருவார். உனக்கென்ன கருமல்? நீ ஒரு மகனேப்பெற்றிருந்தால் என் வருத்தம் தெரியுமுனக்கு-ஐயோ! அவனக் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/12&oldid=730031" இலிருந்து மீள்விக்கப்பட்டது