பக்கம்:Sati Sakti.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கோ. கேத்து சொன்னமாதிரி பாதி பானெதயிரு இருந்துது இண்ணு பொய் கிய் பேசினையா அப்புறம் நானு கெட்டவளாயிருப்பேன். சரியா வித்து பன் னெண்டு காசு கொண்டாரணும். இல்லாப்போன, ஒனக்கு சாப்பாடு போடமாட்டேன் இண்ணேக்கி, கரு. உம், இந்த மோரே யாரும் வாங்காமப்போ-ை நானு என்ன செய்யறது ? - - கா. உம்! ஒகோ, அந்தக் கதையெல்லாம் ஒதவாது. எங்கேயானலும் தூங்கிவுட்டு யாரும் வாங்கலெ இண்ணு சொல்லப்பாக்கரையா? அப்படி விக்காதே சும்மா வந்து சேங்தையோ - உம்முதுவாவது விரிய னும் - அந்த தொடப்பக்கட்டையாவது முறியணும். தா...நானு சொல்றதைக் கேளு. இண்ணக்கி வெள் ளிக்கிழமெ ; அந்த சாமியாரு அந்த ஆலமரத்து டியிலே பொரசங்கம் பண்ணுவாரு வழக்கத்தே போலே. அங்கே போனேண்ணு சீக்கிரம் வித்துட லாம். எடுத்தும்போ சீக்கிரம், (கருடக்கோளுன் மூக்கால் அழுதுகொண்டே அப்படியே செய்கிருன்). க ட் சி - 3 இடம் காலம் பகல். அவ்வூரில் ஓர் ஆலமரத்தடி. ஒரு சன்யாசி பிரசங் கம் செய்துகொண்டிருக்கிருர். ஜனங்கள் சுற்றி ஆலும் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கருடக்கோ ஒன் 'கூட்டத்தின் வெளியில் மோர் பானையை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிரு:ன். ' - சனியாசி.-ஆகவே சகோதரர்களே, நான் மூன்று நாட் களாகச் செய்துவந்த பிரசங்கத்தின் மொத்த தாத் பர்யம் என்னவென்முல், அஹிம்சா பரமோ தர்மம், என்பதுதான். அதாவது அஹிம்சியே மிகவும் உத் கிருஷ்டமான தர்மமென்பதாம். இதை நான் பன் முறை திருப்பித் திருப்பிச் சொன்னது இந்த சிரேஷ்டமான உண்மை உங்கள்_மனதில் படியும் பொருட்டே. இனி நீங்கள் விடைப்பெற்றுக்கொள்ள லாம். (இனங்கள் கலைகின்றனர்). முதல் சிறுவன். அடேய், இந்த இடையன் என்னடா கேட்டுக்கினு இருந்தான் பவுல்லேகூடவா தாக்கம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/11&oldid=730120" இலிருந்து மீள்விக்கப்பட்டது