பக்கம்:Siruthondar.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சிறுத்தொண்டர் 13 வெயிலில் போய் வேருெருவரைத் தேடவேண்டிய அவ சிய மிராதே ! அம்மா, நான் போய் எஜமானனை அழைத்து வாவா, இவ் வாறு ஒர் அதிதி வந்திருக்கிருர் எனக் கூறி? (வெளியில் கதவைத் தட்டுகிற சப்தம்.) வேண்டாம் அதோ என் நாதர் வந்துவிட்டார். (கதவைத் திறக்கிருள்.) சிறுத்தோண்டர் வருகிரு.ர். என்ன நமது துர்ப்பாக்கியம் ! எங்கு தேடியும் உண்ணு திருக்கும் சிவனடியார் ஒருவரும் காணப்படவில்லை. யாரைக் கேட்டபோதிலும், மேலண்டை விதியில் புது மண்டபத்தில் வயிறு கிறம்பப் புசித்தாயிற்று, என்கிருர் கள். இன்று சிவனடியாரைப் பூசித்து, உணவிட்டு, அவர்கள் உச்சிஷ்டத்தைப் புசிக்கும் புண்ணியம் நமக்குக் கிட்டாது போலும்! காதா, அவ்வாறு தாங்கள் கவலைப்படவேண்டாம். இப் பொழுதுதான் சற்று முன்பாக பயிரவ வேடங்கொண்ட ஒரு சிவனடியார் நமது வீட்டிற்கு வந்திருந்தார்.-- அப்படியா! எங்கே அவர் ? எங்கே அவர்? சற்றுமுன்பாகத்தான் வெளியிற் சென்ருர். தாங்கள் வரும்பொழுது எதிரிற் பார்க்கவில்லையோ ? இல்லையே; என் கண்ணிற்கு ஒருவரும் புலப்படவில்லையே, என்ன துரதிர்ஷ்டசாலி நான் ! சந்தனம், உடனே வீதியிற் போய்ப்பார். அதிக தாம் போயிருக்கமாட்டார். (சந்தனம் போகிருள்.) பெண்ணே, வந்தவரை என் கைவிட்டாய்? நாதா, என்மீது தவறில்லை. நான் எவ்வளவோ வேண்டிப் பார்த்தேன். என் நாதர் அதிதியைத்தான் நாடிப்போ யிருக்கிருர், விரைவில் வந்துவிடுவார், தாங்கள் இங்கு சற்று தங்கியிருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தேன். அவர் ஒரே பிடிவாதமாய் புருஷனில்லா கிருஹத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/19&oldid=730205" இலிருந்து மீள்விக்கப்பட்டது