பக்கம்:Siruthondar.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சிறுத்தொண்டர் 17 பேதையா னுமை காதலராகப் பெற்றவொரு பாக்கியத்தால், மாதுமை பங்கன் அருள் நோக்கமே மங்கை என்னை மாண்புறச் செய்யும் ஆதலால் தம் துயர் நீக்கிட ஆகு மென்று எண்ணலானேன். - நாகா, நான் பெண் பேதையாயினும், எப்பொழுது பாம பக்தராகிய தமக்கு நான் பத்தினியாக வாய்த்தேனே, அக் காரணம்பற்றி பாமசிவத்தின் இன்னருளால் அப் பத் னிக் குரியு கடமையை நிறைவேற்ற எனக்கு சக்தி யுன் டாகுமென்று எண்ணுகிறேன். ஆகவே அங்கு நடந்த விர்த்தாங்கத்தையும், தமது மனக்கவலைக்குக் காணக் தையும் சற்றே விளங்க உரைக்க வேண்டும். யாதும் எம்பெருமான் பாரம் பெண்ணே, கடந்ததைக் கூறுகிறேன் கேள். நா னிங்கிருந்து விரைத் தோடி அவர் பாதத்தில் பணிந்து, அவர் இங்கு வந்தபொழுது நான் இவ்விடம் இல்லாத குறையை கமித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்து, பிறகு போஜனத்திற் கெழுங் தருள வேண்டுமென்று வேண்ட, உம்மால் நமக்கு போஜ னமிட முடியுமோ என்று கேட்டார். அதற்கு நான், ஸ்வாமி எம்பெருமான் அருளால் முடியுமென நினைக் கிறேன், என்றேன். பிறகு, தாம் ஆறு திங்களுக் கொரு தரமே போஜனம் கொள்வதாயும், அப்படி யுண்பதும் சாதாரண உணவல்லவென்றும் தெரிவித்தார். அதற்கு, திருவுளத்திற் கிசைந்த உணவையே கொடுத்து பூசிப் பதாகக் கூறி, அது எத்தன்மையான உணவோ உறைக்க வேண்டுமென வேண்ட, அவர் உண்பது சர்வ லட்சணமு மமைந்த ஐந்து வயதுடைய-பசுவெனக் கூறினர். இதற்குத் தாம் கவலைப்படுவா னேன் நம்மிடம் அம் மாதிரியான எத்தனைப் பசுக்கள் இருக்கின்றன ? பெண்ணே, அவசரப்படாதே-அவர் உணவிற் காகிய பசு சாதாரணப் பசு அல்லவாம்-நாப் பசுவாம். நரப் பசுவா! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/23&oldid=730209" இலிருந்து மீள்விக்கப்பட்டது