பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கூட நேர் நேராக இல்லை. இரண்டு சுவர்கள் கூட சம இடையில் கட்டப்படவில்லை. ஒரு கட்டி ட மும் சரியான சச்சதுரமாயில்லை, என்று எழுதியிருக்கிருர் சங் கி தி கிழக்குப் பார்த்தது; பெரிய கோபுரம் தெற்கு பார்த்தது, 188 - அடி உயரம், ப தி ேனு, ரு நிலைகள் உடையது. பூரீ கிருஷ்ணதேவராயரால் சுமார் 1509 - 1580 - ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இக்கோயில் கர்நாடக யுத்தத் திலும், ஐதர்கால யுத்தங்களிலும், பன்முறை சைனியங் கள் தங்குமிடமாக உபயோகிக்கப் பட்டுள்ளது. ஐகரின் பீரங்கிகளின் குண்டுகளின் வடு தெற்கு கோபுரவாயிலில் இன்னும் காணலாம். இக்கோயிலில் ஐகர் லிங்கம் என்று ஒரு விங்கம் உண்டு; ஐதர் கலாபனை காலத்தில் மூலஸ் தானத்திற்கு பழுது வராதபடி, இந்த லிங்க க்கை எதிரில் வைத்து சுவர் எழுப்பி, ஐதர் படைகளே ஏமாற்ற உப யோகிக்கப்பட்டதாம், இ ங் கு ள் ள நடராஜர் சபைக்கு ஆகாச சபை என்று .ெ ப ய ர். இங்கு ஏகாம்பரநாகர் கோயில் அன்றி, பல சிறு கோயில்கள் உள. அவை :வெள்ளைக்கம்பம் - விஷ்ணு பூ சி க் த து இது கோயிலின் இரண்டாம் பிராகாரத்திலுள்ளது, கள்ளக்கம்பம் கோயிலின் வடக்கிலுள்ளது விஷ்ணுவினல் பூசிக்கப்பட்டது ; கல்லிக் கம்பம் பிரமன் பூசித்தது; வாலீச் சாம் வாலி பூசித்தது. பெரிய கோயில் ஸ்வாமி பெயர். ஏகாம்பரநாதர் ஏகர் ஆம்ரம் மாவிருட்சம்; தேவி - காமாட்சியம்மன் ஏலவார் குழலி, கீர்த்தங்கள் ஆலயத்துள் சிவகங்கை, கம்பாநதி, கோயிலுக்கு மேற்கில் சர்வ தீர்த்தம் (இங்கு தெப்பல் உற் சவம் வைகாசி மாசம்) ஸ்தல விருட்சம் மாமரம். இது மிகவும் பழமையான மரம் ; நான்குபக்கங்களிலும் நான்கு வித மாங்காய் காய்க்கிறது. நான்கு வேதங்களே இம்மா மரமாயின வென்பது ஐதிகம். இக்கோயிலில் அம்மனுக்கு மூலஸ்தானம் கிடையாது, உற்சவ விக்கரம் மாத்திரம் உண்டு. பிரம்மொற்சவம் பங்குனிமாசம் 13 ட் க ள்; நான்காம் நாள் ரிஷபவாஹனம், இதற்குப் போர்விடை என்று பெயர், மற்ற ரிஷபங்களெல்லாம் காட்சி விடை யாகும் ; ஸ்வாமி யுத்தத்திற்குச் செல்லும்போது உட்காரு வது போல் ரிஷபத்தின் முகத்திற்கு எதிராக ஆரோ ஹணிக்கிருர் , ஐந்தாம் நாள் காலே அதிகாரகக்தி உற்ச வம் விசேஷம்; 9 ஆவது நாள் வெள்ளி மாவடி சேர்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/10&oldid=730240" இலிருந்து மீள்விக்கப்பட்டது