பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 1 காயாரோகணேஸ்வரர் ஆலயம் :-மகாலட்சுமியும் பிர ஹஸ்பதியும் பூசித்த கோயில்; காயா ரோகண தீர்த்தம். (6) கச்சி மேற்றளி -இதற்கு திரு மேற்றளி என் றும் பெயர் , கச்சாலேஸ்வரர் ஆலயத்திற்கு மே ற் கி லுள்ளது பிள்ளேபாளயத்தில் ; மேல்+தளி-மேற்கிலுள்ள கற்கோயில், என்று அர்த்தமாகும். மஹாவிஷ்னு சிவ சாரூபம் பெறவேண்டி தவமியற்றிய ஸ்தலம். திருஞான சம்பந்தர் சரித்திர சம்பந்தம் உடையது ; ஸ்வாமி திரு மேற்றளி நாதர், தேவி காமாட்சியம்மை ; விஷ்ணு தீர்த் தம். இது பூர்வ காலத்தில் ஒரு சமணக் கோயிலாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றிப்பட்டது எ ன் று எண்ண இடமுண்டு. திருநாவுக்கரசர் சு ந் த மூ ர் த் தி பாடல் பெற்றது. (1) முக்தீஸ்வரர் கோயில் :--இது ஒரு பழய பல்லவா லயம், வைகுண்டப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ளது, றெயில் ஸ்டெஷனுக்குப் போகும் பாதையில் மாதங் கேஸ்வரர் கோயிலுக்கு வடக்கிலுள்ளது, நந்திவர்மன் காலத்து கல்வெட்டு இங்கு ஒன்றுளது. இதன் பூர்வீகப் பெயர் தர்மமஹாதேவி ஆலயம் , தர்ம மஹா தேவி எனும் பல்லவ அரசியால் கட்டப்பட்டது போலும். சுமார் 1200 - வருடங்களுக்கு முற்பட்ட கட்டடம் ; சிலர் இதை கைலாச நாதர் கோயிலுக்கு முற்பட்ட தென்று எண்ணு கின்றனர். கோயில் சிறியது. ஈசான தேவதை பூசித்த ஸ்தலம. - (8) கச்சாலேஸ்வரர் ஆலயம் :-கச்சீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது. கச்சபம்=ஆ மை ; மஹா விஷ்ணு கூர்மாவதாரத்தில் பரமசிவத்தை பூசித்த ஸ்தலம். கோயிலில் இதற்கு ஒரு சிலை யி ரு க் கி ற து. மு. த ல் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயில் ஜிர்ணுேத் தாரணம் செய்யப்பட்டதாக ஒரு கல்வெட்டினல் அறி ருேம். இங்குள்ள துர்க்கை சந்நிதிக் கெதிரில் உள்ள ஒர் கல்லில் சூர்யாஷ்டகத்தில் ஐந்தாறு பாட்டுகள் செதுக் கப்பட்டிருக்கின்றன, இ த் துர் க் ைக கோயில் பழய சோழ கட்டிடம். இக்கோயிலில் ஐந்தாறு பல்லவ தாண் கள் உள. கர்ப்பக்கிரஹத்திற்கு எதிரிலுள்ள மண்டபம் விஜய நகரத்தாசர்கள் காலத்தியது. இங்கு குறும்பர்கள் சிலை உருவங்கள் சில இருக்கின்றன. பிரம்மோற்சவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/14&oldid=730244" இலிருந்து மீள்விக்கப்பட்டது