பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 (11) மாதங்கேஸ்வரர் கோயில் -காஞ்சீபுரம் கஸ்பா வுக்கு வெளியில் உள்ளது, வைகுண்டப் பெருமாள் கோயி லுக்குத் தென்மேற்கில், ஆஸ்பத்திரிக்குப் போகும் வழி யில் ; கர்ப்பக் கிரஹம் மஹாபலிபுரம் கோயிலைப் போன் றது. சற்றேறக்குறைய எட்டாம் நூற்ருண்டில் கட்டப் பட்ட காம்-நந்திவர்மன் எனும் பல்லவ அரசனுல். இக் கோயிலும் முக்தேஸ்வரர் கோயிலும் ஒரேமாதிரியா யிருக் கின்றன. இங்கு மணற் கல்லாலாய சில்பங்கள் இருக் கின்றன. கைலாசநாதர் கோயிலுக்கு முற்பட்ட கென்பர். சிறிய கோயில்; மேற்குபார்த்தது. மாதங்க முனிவர் பூசித்த படியால் மாதங்கேஸ்வரர் எனப்பெயர் பெற்றதாம் ; இங்கு தேவி சந்நிதியில்லை. (12) ஒண காந்தன்றளி -சர்வ தீர்த்தத்திற்கு வடக்கி லுள்ளது. ஒணன் காந்தன் எனும் இரண்டு அசுரர்கள் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி-ஒனகாங்கேஸ்வரர், தேவி, காமாட்சியம்மன் ஒனகாந்த தீர்த்தம், விஷ்னு தீர்த்தம் , சுந்தரமூர்த்தி திருப்பதிகம்பாடி பொன் பெற்ற கேஷத் திரம். c - (18) ஐராவதேஸ்வரர் கோயில் :-ராஜ வீதிக்குக் கிழக் கில் கச்சேஸ்வரர் கோயிலுக்கு ச மி பத் தி ல் வடக்கில் உள்ளது. ஒரு கந்தத்தை யிழக்க ஐராவதம் பரமசிவத் தைப் பூசித்து அக்கந்தம் பெற்ற ஸ்தலம். ப ல் ல வ கட்டிடம் , எட்டாம் ஆண்டின் கடைசியில் கட்டப்பட்டது. மிகவும் சிறிய கோயில். கோயில் பூர்த்தியாக வில்லை. (14) திரிபுராக்தகேஸ்வரர் கோயில் :-காமாட்சி யம்மன் கோயில் சங்கிதி வீதிக்கு எதிரிலுள்ள ஒரு சந்தில் இருக் "கிறது. திரிபுர அசுரர்கள் பூசித்த ஸ்தலமென்பர். பல்லவ கட்டடம்; 8 - ஆம் நூற்றண்டின் கடைசியில் கட்டப்பட்ட தென்பர். - & மேற்குறித்த ஆலயங்களன்றி, வ சி ஷ்டேஸ் வார் கோயில், சோணேஸ்வரர் கோயில், புண்யகோடீஸ்வரர் கோயில், பச்சிமாலயம், பனுதாம், பணிச்சரம், சுரகரீச்சாம, வீராட் டம், வேதநூபுரம், உருத்திரம், இந்திராலயம், கான்முகம், பரசிராமம், அரேகபேசம், இராமம், பிரமம், வச்சிரநகரம், மறசை, வாராகம், காரோணம், பராசரீச்சாம், மாணிச்சரம், மகா சாத்தன்றளி, வீரட்டா னேஸ்வரர் கோயில், வன்மிகநாதர் கோயில், பலபத்திர ஈசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/16&oldid=730246" இலிருந்து மீள்விக்கப்பட்டது