பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரும் பிறந்த இடம். திருஞானசம்பர்கர் பாடல் பெற்றது. காளஹஸ்தி -சித்தார் தாலூகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, பிரபல சிவாலயம்; வாயுவிங்கம், கண்ணப்ப நாயனர் முத்திபெற்ற கேடித்திரம். கோயில் சுவர்ண்முகியின் கீழக்கரையிலுள்ளது. ஸ்வாமி சங்கிதியில் உள்ள என்றும் அவியா தீபம் எந்நேரமும் காற்றில்ை அசைந்துகொண்டிருக்கிறது. சீ கா ள ஹ ஸ் தி என்பது ஊரின் முழுப்பெயர்; சீ.சிலந்தி, காளம் - பாம்பு, ஹஸ்தி யானே, இவை மூன்றும் பூசித்து முத்திபெற்ற கேத்திர மாதலால் சீகாளஹஸ்தி என்று பெயராயது. சிவகோசரி யார் முத்திபெற்ற ஸ்தலம். நக்கீார் பூசித்த ஸ்தலம். வாயுபகவான் பூசித்தது. மூவர் பாடல் பெற்றது. இதை கட்சிண கைலாசம் என்பர். மாசி மாதம் பிரம்மோற்சவம் ; சிவராத்திரி மிகவும் விசேடம். இவ்வூருக்கு சீபுரம் என் ஆறும் மும்முடிச் சோழபுரம் என்றும் பழய பெயர்களுண்டு. சுயம்புலிங்கம் ; வெண்மை கிறமுடையது. எதிரிலுள்ள நந்தி யும் வெண்மை நிறமுடையது. ஸ்வாமி மேற்குபார்த்து வீற்றிருக்கிரு.ர். இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் 30-அடியின் கீழ் பாதாள வியைகர் கோயிலிருக்கிறது. இங்குள்ள 1000 கால் மண்டபமும் காலி கோபுரமும் பூரீ கிருஷ்ணதேவராயர்ால் கட்டப்பட்டவை. ஸ் வா மி - காளத்திநாதேஸ்வரர், தேவி - ஞானப்பூங்கோதையம்மை. தீர்த்தம் பொன்முகலி, திருஞானசம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. இக்கோயிலில் ஸ்வாமி பூச்ைக்கு தும்பைப்பூ மாலை விசேஷம். கோபுரம் மூன்றே நிலைகளுடையது. பெரிய கோயிலின் தெற்கிலுள்ள குன்றில் கண்ணப்ப ஈஸ் வரர் கோயில் இருக்கிறது. கண்ணப்பர் பூசித்த ஸ்தலம். இங்கு மணிகண்டதீஸ்வரர் கோயில் என்று ஒரு சிவாலய முண்டு. பழய கல்வெட்டுகளில் திருமணிக் கங்கையுடைய நாயனர் என்று ஸ்வாமி பெயர் இருக்கிறது. இக்கோயில் 12-ஆம் நூற்ருண்டில் ஆண்ட வீரராஜேந்திர சோழல்ை கட்டப்பட்டது. இக்கோயிலுக்குள் விஷ்ணு சங்கிதியும் உண்டு. ஸ்வாமி பெயர் திருமணிக் கங்கையுடைய நாயனர் என்றிருக்கிறது கல்வெட்டுகளில் ; இது மூன்ரும் குலோத் துங்க சோழனுல் 12-ஆம் நாற்ருண்டில் கட்டப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/22&oldid=730252" இலிருந்து மீள்விக்கப்பட்டது