பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அகஸ்தியர் விஷ்ணுமூர்த்தியை சிவலிங்கமாக்கி பூசித்த கேத்ரம். புஷ்பகங்தா, கவுன்சனர் பூசித்த ஸ்தலம். ஆலயம் முறகாலத்தில் விஷ்ணு ஆலயம்ாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டது. சிவலிங்கத்தின் பின் பெரு மாள் உருவம் இருக்கிறதென்பர். ஸ்வாமி குறுபலா ஈஸ்வரர், தேவி குழல்வாய்மொழியம்மை, சித்ராநதி தீர்த்தம்; குறும்பலா விருட்சம். பஞ்ச சபைகளில் இங்கு சித்திர சபை, ஸ்வாமிக்கு துளசி பூசை யுண்டு. கோயில் சங்கைப் போல் கோணுகாரமானது. கோயில் வடக்கு பார்த்தது. இப்பக்கம் ஒரு பெரிய கோபுரம் ஆரம்பிக்கப்பட்டு முடிக் கப்படாது விடப்பட்டிருக்கிறது. இது விஜயநகரத்தாசர் காலத்தியதா யிருக்கலாம். தென்காசியி லிருப்பதுபோல் அம்மன் சங்கிதியில் 10 அழகிய சிலை உருவங்கள் உண்டு. அம்மன் சங்கிதியும் ஸ்வாமி சந்நிதியும் அக்கம்பக்கமா யிருக்கின்றன. திருஞானசம்பக்தர் பாடல் பெற்றது. இங்கு முசாபர் பங்களா உண்டு, சத்திரங்களுமுண்டு. குறகாடு -கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம் ஸ்வாமி புனுகிஸ்வரர் ; தேவி சாந்த நாயகி பிரம்மோற்சவம் வைகாசி மாதம். குறுமபாலூர் -சென்னை ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா, சிவாலயம் பூரீரங்கத்திற்கு 28-மயில் ; வைப்பு ஸ்தலம. குழிப்பிறை -திருமெய்யம் தாலுக்கா, புதுக்கோட்டை சமஸ்தானம், சிவாலயம் புதியது. குறுக்கை:-(திரு) சென்னை ராஜகானி, பொன்னூருக்கு 4-மயில் வடமேற்கு. அஷ்ட வீரட்டானங்களிளொன்று. மன்மதனே எரித்த கேடித்ரம், மார்க்கண்டேயர் பூசித்த தலடி. ஸ்வாமி,வீரட்டேஸ்வரர். கேவிஞானம்பிகை, குல தீர்த்தம். அப்பர் பாடல் பெற்றது, தர்மபுர ஆதீனம் மேற்பார்வை. குறுங்குடி :-தென் இந்தியா, திருநெல்வேலி ஜில்லா வாலயம் ஸ்வாமி - சத்திநாதேஸ்வரர், தேவி பாங்காய நாயகி. பரசுராமர் பூசித்த கேத்ரமாம். குன்றக்குடி -சென்னை ராஜதானி, மதுரை ஜில்லா, சிவாலயம்; பிரம்மோற்சவம் பங்குனிமீ. ஸ்வாமி.அகஸ் தீஸ்வரர், தேவி உமாதேவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/38&oldid=730269" இலிருந்து மீள்விக்கப்பட்டது