பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நெறிகாட்டு நாயகர், தேவி புரிகுழலாம்பிகை; சங்கு தீர்த் தம், மணிமுத்தாநதி. சுந்தரருக்கு வழிகாட்டியபடியால் ஸ்வாமிக்கு நெறிகாட்டு நாயகர் எனப் பெயர் வந்தது ; சுந்தார் பாடல் பெற்றது. கூந்தலூர் :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி சண்பகாாண்யேஸ்வரர், தேவி ஆனந்த வல்லி, குமர தீர்த்தம் சீதா தீர்த்தம்; கும்பகோணம் ஸ்டே ஷனிலிருந்து 9-மயில், பேணு பெருந்துரைக்கு அருகி லுள்ளது ; குமரக்கடவுள், சிதாதேவி, ரோமரிஷி பூசித்த ஸ்தலம். இங்கு குமரக்கடவுளுக்கு தனியாக ஆலய முளது. ரோமரிஷி சிலை கோபுரத்தின் உட்பக்கம் உளது. தேவார வைடபுளி தலம. கூரம் :-காஞ்சிபுரம் தாலுக்கா, செங்கல்பட்டு ஜில்லா சென்னை ராஜதானி, கூரம் சாசனத்தில் இங்கு வித்யா விcத பல்லவ பரமேஸ்வரர் கோயில் எனும் சிவாலயம் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வித்யாவிதேன் எனும் பல்லவ அரசனுல் கட்டப்பட்ட கோயிலாம். இது பிற்காலம் விஷ்ணு ஆலயமாக மாற்றப்பட்டது. பழய ஆலயம் சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்டது : கஜப் பிருஷ்ட ஆகிரதி யுடையது. கூலுபிரிவு :-வட இந்தியா, பஞ்சாப் மாகாணம், இங்கு பல சிவாலயங்கள் உண்டு : 1. பிஜ்லிமகாதேவர் கோயில் மலையிலுள்ளது : 36 x 24 அடி விஸ்தீரணம். அடிப்படை கருங்கல், மேல் கட்டிடம் தேவதாரு மரத்தாலாயது. துவஜஸ்த்ம்பம் 60 அடி உயரம். 2. ஹாட் தாழ்வரையில் கோயில் ஸ்வாமி பாஷேஸ்வர், கற்காலம் பூஜையில்லே 8.5 x 7 அடி உள் அளவு, பருமனை சுவர்களால் சூழப் பட்டதால் வெளி அளவு 18 அடி சதுரம், 3. கக்கர் கெளரி திலகர் கோயில். 4. தாஷால் கெளரிஷங்கர் கோயில். 5. துண்டி, திரிலோகநாத் கோயில் ; இது பூர்வம் புக்க ஆலயமா யிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதென்பர். 6. காலாத் கபிலமுனி கோயில் சிவாலயம். கூவம் :-திருவிற் கோலம் என்பது இதன் தேவாரப் பெயர். சென்னை ராஜதானி, கடம்பத்துனர் ஸ்டேஷனுக்கு 5க்-மயில் தென்மேற்கு, திரிபுர தகனஞ்செய்ய சிவபெரு மான் இங்கிருந்து புறப்பட்ட் கேஷத்ரம். லிங்கத்தின் வர்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/40&oldid=730272" இலிருந்து மீள்விக்கப்பட்டது