பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கைலாயம் :-(திரு) இதற்கு வெள்ளியங்கிரி என்றும் பெயர், இமயமலையிலுள்ளது. ஸ்வாமி கைலாசநாதர் அல் லது பரமசிவம், தேவி பார்வதி அல்லது கிரிஜா ; மஹா சிவதீர்த்தம், இதை கொடித்தான்மலை என்று சந்தரர் பாடி யுள்ளார். சரவணப்பொய்கை தீர்த்தம் ; மூவர் பாடல் பெற்றது. கைலாயகிரிக்குப் போகும் மார்க்கத்தில் காளி கங்கையும் சரோஜூ எனும் நதியும் கூடுமிடத்தில் ஒரு சிவாலய மிருக்கிறது. - கொடுங்கோளுர் -தென் இந்தியா மலேயாள தேசம், அஞ்சைக்களத்திற்கு 3 மயில் சிவாலயம் ; ஸ்வாமி சிதம்ப ரேசர், தேவி சிவகாமி ; இடங்கழி நாயனர் முத்திபெற்ற ஸ்தலம், தேவார வைப்புஸ்தலம். கொங்கணம் :-தென் இந்தியா மலையாள தேசம் சிவால யம் ; ஸ்வாமி கிரீசர், உமாதேவி ; வைப்புஸ்தலம். கைலாயபுரம் :-திருந்ெல்வேலி ஜில்லா, சிந்துபூந்துறை சென்னை ராஜதானி, ஸ்வாமி கைலாசநாதர் தேவி சிவகாமி; தாம்ரபர்ணி தீர்த்தம் , அகஸ்தியர் பூசித்த ஸ்தலம். கொட்டயம் :-மலையாளம் சென்னை ராஜதானி, அரிசி பரம்பு சிவாலயம்; சிறிய கோயில். கொட்டையூர் -சென்னை ராஜதானி, செட்டிநாட்டி லுள்ளது காரைக்குடிக் கருகில் சிவாலயம், ஸ்வாமி சுந்த ரேஸ்வரர், தேவி மீனுட்சியம்மன். கொட்டையூர் -சென்னை ராஜதானி கும்பகோணத் திற்கு 2 மயில் வட மேற்கு ஸ்வாமி கோடீஸ்வரர், கேவி பந்தாடுநாயகியம்மை, கேர்டி தீர்த்தம்; மார்க்கண்டேயர், பத்திரயோகி, ஆத்திரேயர் பூஜித்த ஸ்தலம், ஸ்வாமி ஆமணக்கு கொட்டைச் செடியின்கீழ் இருந்து தோன்றிய மையால் கொட்டையூர் எனப் பெயர் பெற்றது. சோழ மகாராஜாவுக்கு கோடிலிங்கமாகத் தரிசனம் கொடுத்தமை யால் கோடீஸ்வரர் என்று ஸ்வாமிக்கு திருநாமமுண்டு. பெரிய லிங்கத்தில் அநேகம் சிறு லிங்கங்கள் இருப்பது போல் காணப்படும். திருவலஞ்சுழியில் காவிரியின் ஜலத் தில் இறங்கிய இராண்ட முனிவர் இங்கு வெளிவந்து அனுக் கிரஹம் பெற்ருர். ஆகவே இதற்கு ஹோண்டபுரம் எனும் நாமமுண்டு. இக்கோயிலில் ஏாண்ட முனிவர் பிரதிஷ்டை 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/43&oldid=730275" இலிருந்து மீள்விக்கப்பட்டது