பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மூவர் கோயில் எனப் பெயர்பெற்ற தென்பர் 950-970-40 பூர்வ க | ல த் தி ல் மூன்று கோயில்களிருந்தனவாம்; தற்காலம் ஒன்று தானிருக்கிறது. பழயகோயில் பத்தாம் அாற்ருண்டின்முன் கட்டப்பட்டதாம் ; அழகிய சில்பமமைக் தது; கிலமாயிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் இவ்வூர் குறிக் கப்பட்டிருக்கிறது. கர்ப்பக்கிரஹம் 8 அடி 9 அங்குலம் சதுரம் ; பிராகாரம் 17 அடி 9 அங்குலம் x 15 அடி விஸ்தீர் ணம் பல்லவ கட்டிடம் , இங்கு 3 வலம்புரி வினயகர்களுண்டு இவ்வூரில் மற்ருெரு சிவாலயமுண்டு. கொத்தமங்கலம் -சென்னை ராஜதானி செட்டிநாடு சிவாலயம் ஸ்வாமி தம்மனே ஈஸ்வரர். கொடுமுடி :-ஈரோடு தாலூகா, கோயமுத்துார் ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம், ஸ்வாமி மகுடேஸ்வரர் தேவி செளந்தரநாயகி, கொங்குதேசத்து 7 சிவாலயங் களுள் இது ஒன்ரும் , இங்கிருக்கும் வன்னிமரம் மிகவும் புராதனமானதென்பர், இதற்குப் பூவும் காயும் கிடையா தென்பர். . கொடுவாயூர் -தென் இந்தியா விஸ்வநாதர் கோயில். கொண்டகம்பேடு -சென்னை ராஜதானி, விசாகப்பட்ட ணம் ஜில்லா, இங்கு மயில் தாரத்தில் காட்டின் நடுவில் ஒரு பழய சின்ாலயம் உண்டு; பூஜை நடக்கிறது. வழிப் போக்கர்களெல்லாம் ஒரு புஷ்பத்தால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்து போவது வழக்கமாம். கொண்டல் -சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம், இங்கு விஷ்னு ஒருபுறம் இருக்கிருரர். ஸ்வாமி தாாக பரமேஸ்வரர், விஷ்னு வழிபட்டதால் கொண்டல் வண்ணன்குடி எனப் பெயர் பெற்றது. அப்பெயர் நாள டைவில் கொண்டல் எனக் குறுக்கப்பட்டது. சீர்காழிக்கு 33 மயில் தூரம், - கொண்டிவ்டி -பம்பாய் ராஜதானி, சால்செட்டுக் கருகில் கோகேஸ்வரர் குகைக்கோயில். கொண்டிச்சரம் :-(திரு) சென்னை ராஜதானி, நங்கிலத் திற்கு 1 மயில் மேற்கு, காமதேனு பூசித்த கேத்ரம், இதற்கு வில்வாரண்ய கேஷத்ரம் என்றும் பெயர். ஸ்வாமி பசுபதீஸ்வரர், தேவி சாந்தநாயகி, திருநாவுக்கரசு பாடல் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/45&oldid=730277" இலிருந்து மீள்விக்கப்பட்டது