பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கோகர்ணம்-வட கன்னட ஜில்லா, பம்பாய் ராஜதானி; பிரபல சிவாலயம். கார்வார் என்னும் ஊருக்கு 30-மயில். இதற்கு பூகைலாசம் என்றும் பெயர். ஸ்வாமி.மஹா பலேஷ்வர், தேவி கோகர்ண நாயகி.பார்வதி. கோடி தீர்த்தம் ராமதீர்த்தம்; இங்கு போவதற்கு மார்ம கோவா வுக்கு ரெயில் மார்க்கமாய்ப் போய், அங்கிருந்து தாத்ரிக்கு ஸ்டீமர் மூலமாய்ப போய், அங்கிருந்து வண்டி மார்க்கமாய்ப் போய்ச் சேரவேண்டும். கோயில் திராவிட சில்பம். சிவலிங்கம் பசுவின் காதுபோல் குழைந்து நீண்டபடியால் கோகர்ணம் எனப் பெயர்பெற்றது. இராவணன் தன் தாயாருக்காக கைலாயத்தில் பார்வதிதேவியார் பூசித்து வக்க ஆ க் ம லிங் கத் ைத க் கொண்டுவரும்பொழுது விநாயகர் சூழ்ச்சியால் அது இங்கு வைக்கப்பட்டதாம். ராவணன் லிங்கத்தைப் பெயர்க்க முயன்றபொழுது முறுக்கப்பட்டதாம். ராவணனது விரல்கள் லிங்கத்தில் வடுவா யிருக்கிறது. ராவணன் தன் முழு பலத்தையும் கொண்டு பெயர்க்க முயன்றும் முடியாமற்போனபடியால் ஸ்வாமிக்கு மஹாபலேஷ்வர் எனப் பெயர் உண்டாயிற்று. லிங்கம் சில அங்குல உயரம். அதன் பெரும்பாகம் பீடத்தி லிருக்கும் ஜலத்தில் மறைந்திருக்கிறது. 25 வருடங்களுக்கு ஒருமுறை அஷ்டபங்கனம் செய்யப்படுகிறது. இக்கோயி வில் ஆதி கோகர்ண லிங்கம் என்று ஒரு லிங்கம் இருக் கிறது. பூரீராமர் ஆக்ம லிங்கத்தை பூசித்ததாக ஐதிகம். இங்கு கோடிதீர்த்தத்தின் மத்தியில் சப்த கோடீஸ்வரர் லிங்கம் என்று ஒன்றுண்டு. ஷாஸ்திரேஸ்வர் லிங்கம் 18 அங்குலம் கிகளம், 2த் அடி சுற்றளவு. இங்கு அருகாமை யில் பல சிவாலயங்கள் உள. 1. அகஸ்தீஸ்வரர் கோயில் 2. வசிஷ்டேஸ்வரர் கோயில் 3. சங்கரநாராயணர் கோயில்; இது பாதி மஹாவிஷ்ணு 4. விஸ்வாமித்ரேஷ்வர் கோயில 5. அமிர்தேஸ்வரர் கோயில் 6. காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி லிங்கங் கள் 7. விதுத்பாசேதலேஷ்வர் கோயில் 8. கேஷ்வர் கோயில் 9. மொரதேஷ்வர் கோயில் 10. தாரேஷ்வர் கோயில் 11. குமண்டேஷ்வர் கோயில் 12 கால்கேஷ்வர் கோயில் மற்றும் கும்பகர்ணலிங்கம், விபீஷண லிங்கம், காகேஷர் லிங்கம் சனத்குமார லிங்கம் முதலிய லிங்கங்கள் உள. திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/49&oldid=730281" இலிருந்து மீள்விக்கப்பட்டது