பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1. அகஸ்தியர், வாதாபி வில்வளர்காே அழிந்தஸ்தலமென்பர் ; சிவாலயம் பாண்டிய அரசனல் கட்டப்பட்டது. இங்கு முசாபர் பங்களா உண்டு. கோயில்பட்டி :-மதுரை ஜில்லா, சென்னே ராஜதானி: திருமங்கலத்திற்கு 14 மயில், சிமாலயம் லிங்கம் முக்கிய தினங்களில் தான் கோயிலில் வைக்கப்படுகிறது. கோயில் அழகிய கட்டிடம். கோயிலூர் -திருக்கோயிலூர் என்றும் உசாத்தானம் என்றும் வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி முத்துப் பேட்டை ஸ்டேஷனுக்கு 2 மயில் பூரீராமர், லட்சுமணர், ஜாம்பவான், சுக்ரீவான், அனுமார் பூஜித்த ஸ் த லம், ஸ்வாமி மந்திரபுரேஸ்வர், தேவி பெரியநாயகியம்மை; கிர்மல தீர்த்தம் , திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கோயில் வெண்ணி :-வெண்ணியூர் எ ன் று ம் பெயர் பெற்றது. தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், சென்னை ராஜதானி. தத்தாத்ரேயர் பூசித்த ஸ்தலம்; சிவாலயம் ; லிங்கமானது கொம்புகளைக் கட்டாகக் கட்டியதுபோல் உருவம் உடையது; ஸ்வாமி இட்சுபுரீஸ்வரர், தேவி அழகிய நாயகியம்மை, நந்தியாவார்த்த தீர்த்தம். கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் திருவெண்ணியுடையார் எஸ்றிருக்கிறது, ஊர் பெயர் வெண்ணிநகரம் என்றிருக்கிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசு பாடல்பெற்றது. இங்கு உக்கடை தேவர் சத்திாமுண்டு. கோர்கரா :-வட இந்தியா இமய மலையிலுள்ள சிவ கேத்ரம், கோரக்பூர் -ஐக்கிய மாகாணத்திலுள்ளது. இங்கு சோகாக் எனும் கிர்ாமத்தில் சிறு சிவாலயமுள்ளது. ஸ்வாமி மஹா ருத்திரநாதர். கோல்க்கா :-(திரு) இதற்கு அகரத் திருக்கோலக்கா என் ஆறும் பெயர் , தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம். சீர்காழிக்கருகிலுள்ளது. திருஞானசம்பந்தர் பொற்ருளம் பெற்ற ஸ்தலம், தேவி அதற்கு ஒசை கொடுத்ததாக ஐதிகம். ஸ்வாமி சப்தபுரீஸ்வரர், தேவி ஒசைகொடுத்த நாயகி, சூரிய தீர்த் தம் ஆராதீர்த்தம் , திருஞானசம்பக்தர் சுந்தரர் பாடல் பெற்றது. அகஸ்தியர் கண்வர் பூசித்த தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/53&oldid=730286" இலிருந்து மீள்விக்கப்பட்டது