பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 குண்டையூரிலிருந்த நெல் மலையை நீள கினேந்தடியேன் என்னும் பதிகம்பாடி பூதகணங்களைக்கொண்டு திருவாரூ ருக்கு எடுத்துக்கொண்டுபோகச் செய்த ஸ்தலம். ஸ்வாமி கேர்ளிவி நாகேஸ்வரர், தேவி வண்டமர் பூங்குழலியம்மை, பிரம தீர்த்தம்; மூவர் பாடல்பெற்றது. கோனேரிராஜபுரம் :-இதற்கு திருகல்லம் என்றும் பெயர். தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம்; கண்ட ராதித்யர் மனைவியாகிய செம்பொன்மா தேவியாரால், பழய செங்கற்கோயிலா யிருந்தது, கருங்கல் கட்டடமாக்கப்பட் டது. கண்டராதித்யர் காலம் 948 வருஷம்; ஆகவே இது ஒரு மிகவும் பழய கோயிலாம். புதுப்பித்த கோயிலுக்கு கண்ட்ரா தித்தம் எனப் பெயர் ஆயிற்று. கோயிலில் கண்டரா தித்தர் செம்பொன்மாதேவியார், அவர்களது குமாரன் முதலியோருடைய சிலைகள் இருக்கின்றன. ஸ் வ மி உமா மஹேஸ்வரர், தேவி மங்களநாயகி, கங்கை தீர்த்தம், இங்குள்ள நடராஜர் விக்ரஹம் அழகியது. கோஹத்தி -வட இந்தியாவில் ஆசாம் .ே க ச க் தி ல் காம்பே ஜில்லாவிற் முக்கிய பட்டணம்; பிரமபுத்ரா நதியின் இரு கரையிலுமுள்ளது. நதியின் மத்தியில் ஒரு தீவில் சிவாலய மிருக்கிறது. ஸ்வாமி உமாகக் கர். ஸ்டேஷனுக்கு 1 மயிலில் தர்ம சாலையுண்டு, பண்டாக்கள் வீடுகளுமுண்டு ஆசாம் பெங்காள ரெயில் ஸ்டேஷன். கெளரிசங்கர் மலை :-வட இந்தியாவிலுள்ளது. சிவாலயம் இங்கு 36 சிவலிங்கள் உள. கெளசிகா :-மைசூர் ராஜ்யம், சிவாலயம் சிறியது. சக்கரபள்ளி:-ராஜகிரி ஐயம்பேட்டை எனவும் வழங் கப்படுகிறது , சென்னை ராஜதானி ஐயம்பேட்டை ஸ்டேஷ லுக்கு மயில் மேற்கு, சிவாலயம், ஜெயந்தன் சப்த யாத்ருக்கள் பூசித்த ஸ்தலம், திருமால் பூசித்து சக்கரம் பெற்ற ஸ்தலமென்பர் சிலர், ஸ்வாமி ஆலந்துறை நாகர், பசுபதி நாயகேஸ்வரர், தேவி அல்லியங்கோதை, பால்வன காயகி, காவிரி தீர்த்தம், காக தீர்த்தம் : திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சகல் தீர்த்த:-மத்திய இந்தியா, பரோக் ஸ்டேஷனி விருந்து 10 மயில் சிவாலயம், ஸ்வாமி மஹாதேவ் கர்மதை தீர்த்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/57&oldid=730290" இலிருந்து மீள்விக்கப்பட்டது