பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கோயில; இங்கு சுந்தரபாண்டியன் (1270-1302) காலத்திய கல் வெட்டுகள் உள. - சிதம்பரம்:-சென்னை ராஜதானி, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், இதற்குக் கோயில், தில்லை, பெரும்பற்றப்புலியூர், புண்டரீகபுரம், தகராகாசம், வியாக்ரபுரம், என்றும் பெயர் களுண்டு. தில்லை என்பது ஒரு செடியின் பெயர் , தில்லைக் காடா யிருந்தமையால் ஆதியில் அப்பெயர் வந்திருக்கலாம். சிறு x அம்பலம் = சிற்றம்பலம், சிதம்பரம் என்ருயது என பெர்கூசன் எண்ணுகிருர், சித் x அம்பலம் = சிற்றம்பலம், சிக்மபாம் ஆயது என்று சமஸ்கிருத வித்வான்கள் கூறு கின்றனர். கோயில் மிகவும் பிரபலமானது. மூவர் பாடல் பெற்றது. . திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பாடல் பெற்ற ஸ்தலம் ; பூலோக கைலாசம் எனப் பெயர் பெற்றது. தர்சிக்க முக்தியளிக்கும் ஸ்தலம் என்பது ஸ்தல மகாத் மியம்; பதஞ்சலி வியாக்ர பாதர்களால் சேவிக்கப்பட்ட கேடித்திரம். பஞ்ச சபைகளில், கனக சபையையுடையது ; சபாநாதர் ஆருந்தத் தாண்டவ மாடிய பதி, தில்லை மூவாயிர வர் பூசிக்கும் கோயிலையுடையது. திருநீலகண்ட நாயர்ை, நந்தனர், கூற்றுவநாயனுர், சந்தனசாரியார், கோச்செங்கட் சோழர், கணம்புல்லர், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியர், துற்பதன், துற்சகன், துர்த்தெரி சினன் முதலியோர் முக்திபெற்ற ஸ்தலம். உபமன்யு பாற்கடல் பெற்றுண்ட ஸ்தலம்; வியாசர், சுகர், செளனகர் சூதர் பூசித்த தலம். குலோத்துங்க சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி இக்கோயிலின் ஒர் அ ைற யி ல் தேவாரங்களைக் கண்டெடுத்த ஸ்தலம் ; மர்ணிக்கவாசகர் இங்கு சமணர்களே வென்ற இடம்; அர்த்த ஜாமத்தில் எல்லா சிவ கேஷத்திரங்களிலுமுள்ள கி வ க லே க ள் தன்னிடம் வந்து சேரப்பெற்ற சிவமூர்த்தியையுடையது. பஞ்சலிங்கங்களில் காயலிங்க கேஷத்திரம். சிவாலயம் ஆதியில் சிறியதாயிருந்து பிறகு மிகவும் பெரியதாக்கப் பட்டது. ஸ்வாமி திருமூலநாதர்-சபாநாயகர் ; தேவி உமை யம்மை, சிவகாமியம்மை, சிவகங்கை தீர்த்தம், புலிச்சுர தீர்த்தம், குய்ய தீர்த்தம், புலிமடு, வியாக்ரபாத கீர்த்தம், காந்த தீர்த்தம், பிரம தீர்த்தம், திருப்பாற்கடல் , இங்குள்ள கூபத்திற்கு பரமாகக்த கூபம் என்று பெயர். கோயில் 600 கெஜம் தெற்கு வடக்கு 500 கெஜம் கிழக்கு, மேற்கு;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/71&oldid=730306" இலிருந்து மீள்விக்கப்பட்டது