பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மொத்தம் 39 ஏகரா விஸ்தீர்ணமுடையது. வெளி மதிற் சுவர்கள் 30 அடி உயரம், பெரிய கோபுரம் சுமார் 122 அடி உயரம் ; கோயிலில் நான்கு பிராகாரங்கள் இருப்பதாகக் கூறலாம்; முதல் பிராகாரம் விக்ரம சோழனல் கட்டப் பட்ட தென்பர் ; இரண்டாம் பிராகாரத்திற்கு விக்ரம சோழன் திருமாளிகை என்று பெயர்; மூன்ரும் பிராகாரத் தில் 1000-க்கால் மண்டப மிருக்கிறது. 350 x 260 அடி விஸ்தீரணமுடையது, இது 1595 முதல் 1885 ஆண்டிற்குள் கட்டப்பட்டதாம். முதல் கு ேல | த து ங் க ன் தங்கை குந்தவையும், சிற்றரசனகிய நரலோகவீரனும் கோயிலில் இரண்டு பிராகாரங்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் 100 கால் மண்டபத்தையும் கட்டி வைத்தனர். பெரிய புராணத்தை எழுதும்படிச்செய்த அ ன ப ா ய சோழன் அம்மன் கோயில் பிராகார மதில்கள் கட்டி வைத்தனன். மூன்ருவது குலோத்துங்கன் (1178) சபா பதிக்கு முக மண்டபமும், ஒரு கோபுரமும் அம்ம்ன்கோவில் பிராகாரத்தில் திருப்பணிகளும் செய்தனன். கோவில் மூலஸ்தானம் மிகவும் பழமையானது; இது ஒரு ரதத்தைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. B ட ர ஜ மூ ர் த் தி யிருக்கும் சபைக்கு சித்சபை என்று பெயர் ; இது மாத்தாலாயது. சித்சபைக்கு எதிரில் க ன க ச ைப இருக்கிறது; இங்குதான் நடராஜருக்கு தினம் அபிஷேக மாகிறது. கனகசபையும் மரத்தாலாயது. நடராஜ விக்ா ஹத்திற்குப் பின்னல் சிதம்பர ரஹஸ்யம் இருக்கிறது ; இது சாதாரணமாகத் தி ை ய ர ல் மூடப்பட்டிருக்கும் ; இங்கு லிங்கம் ஆகாய லிங்கமாம். சித் சன்பயில் நடராஜப் பெருமாள் பதஞ்சலி வியாக்ரபாதர்களுக்கு நடனமாடிய தாக ஐதிகம், இங்குள்ள ஐந்து படிகளும் வெள்ளியால் மூடப்ப்ட்டிருக்கின்றன. இவை பஞ்சாக்கரங்களைக் குறிக் ன்றன என்பது ஐதிகம். சித் சபையானது மா னி ட உடம்பில் எப்படி இருதயம் இருக்கிறதோ, அப்படியே இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சபை தான் இக்கோயிலுக்கு கர்ப்பக்கிருஹமாம். இம்மண்டபம் அடி பீடத்திற்குமேற் கட்டப்பட்டிருக்கிறது. இதில் நடனம் .ெ ச ய் யு ம் சி ல் ப ங், க ள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளைப் போன்ற அழகிய சில்பங்கள் இந்தியா முழுவதுமே கிடையா தெனக் கூறலாம். இம்மண்டபத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/72&oldid=730307" இலிருந்து மீள்விக்கப்பட்டது