பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ளது. சிவாலயம் சிறியது. லிங்கம் அர்த்தநாரீஸ்வரர் வடி வானது. கோயில் மேற்கு பார்த்தது. சிவராத்திரிதினம் சூரிய நமஸ்காரம். ' ' ... * , சோம்காத்பூர் :-மைசூர் ராஜ்யம், சீரங்கபட்டனத்திற்கு 20 மைல்; காவிரிக்கு இடதுகரையிலுள்ளது. சோமன் என் லும் பல்லவ களகர்த்தல்ை சுமார் 1270-ஆம் வருடம் கட்டப் பட்டதென்பர். சோமன் என்பவன் ஹொய்சால அரசன் மந்திரி என்பர். கோயில் முழுவதும் கருமையான கற்க ளால் கட்டப்பட்டது, சுண்ணும்பே கட்டடத்தில் கிடையா தாம். ஹொய்சாலகில்பம், தக்கனுசாரி (?) கட்டியதென்பர், இங்கு தற்காலம் முக்கியமூர்த்தி கேசவப் பெருமாள், இது தற்காலம் காணுமற் போயிற்றென்பர்; ஆயினும் கோயி லில் ஒரு சங்கிதியில், சிவலிங்கம், கணபதி, மஹிஷாசுர மர்த்தனி சிலைகளிருக்கின்றன. கோயில் மூன்று விமா னங்களுடைய சளுக்கிய கட்டிடம். - சோமகாதபுரம் :-பம்பாய் ராஜதானி, கத்திவார் பிரிவு, ஜூனகட் ஸ்டேட்டிலுள்ளது, பெரிய சிவாலயம். ஜோதி லிங்கம்-கோயிலுக்குப் பின்புறம் பட்குண்டம் எனும் குளத் தருகில் பூரீ கிருஷ்ணபகவான் மடிந்ததாக இதிகாசம், மகம்மது கஜனியால் 1025-ம் வருடம் இக்கோயில் கொள்ளை யடிக்கப்பட்டது. வீராவால் ஸ்டேஷனிலிருந்து போக வேண்டும், அந்த ஸ்டேஷன் வீராவால்-பெளநகர்-கோண் டால-ஜூனகட்-போர்பந்தர் ரெயில்வேயிலிருக்கிறது. இதற்கு பிரபாஸ் படன் என்றும் பெயர். வீராவல் ஸ்டே ஷனிலிருந்து 2 மைல் கோயில்-சளுக்கிய சில்பம்-பெரும் பாலும் மணற்கல்லாலாயது. சோமூர் :-சென்னை ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா, கரூர் தாலூகா, சோமேஸ்வரர் கோயில். - சோழபுரம் :-೧FTಶಿr ராஜகானி, வடஆற்காடு ஜில்லா, வேலூர் தாலூகா, சிவாலயம் கிலமாயிருக்கிறது, கல்வெட்டு கள் உடையது. - சோழமாதேவி :-சென்னை ராஜதானி, கோயமுத்துளர் ஜில்லா, உடுமல்பேட் தாலூகா, சிவாலயம். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/13&oldid=730324" இலிருந்து மீள்விக்கப்பட்டது