பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 2 கோயில்கள் இருக்கின்றன. (1) கைலாசநாதர் கோயில் (2) இளtஸ்வரர் கோயில், கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் இளமீசுரமுடையார் என்றிருக்கிறது. இது 1286-ம் வரு ஷத்திற்கு முற்பட்டகோயில். ராமநாகராசர் என்பவ ரால் முதலில் கட்டப்பட்டது. ஸ்வாமி மேற்கு பார்த்தது. சுமார் 300 வருடங்களுக்கு முன் கெட்டி முதவியார்க ளால் புதுப்பிக்கப்பட்டது. கைலாசநாதர் கோயில், மும்முடிக்கெட்டி முதலியாரால் ஆரம்பிக்கப்பட்டு, சீயாளக் கெட்டி முதலியாரால் தொடரப்பட்டு, வணங்காமுடி கெட்டி முதலியாரால், வேலை முடிக்கப்பட்டது. இங்கு மும் முடிக்கெட்டி முதலியார்களுடையவுருவங்களும், அவர்க ளது மனைவிகளுருவங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் சாமல் ஆற்றங்கரையிலுள்ளது, முக்கிய உற்சவங் கள் இரண்டு, தை, வைகாசி மாதங்களில். பிரதான வாசலின் கதவுகளில் 120 இரும்பு பூண்கள் உள, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானது.கோயிலிலுள்ள ஒரு சில்பம் வாலிவதக்கைக் குறிக்கிறது; இதில் விசேஷ மென்னவென்றல் வாலி உருவத்தினிடமிருந்து பூரீாாமரை பார்க்கமுடியாது. நீராமருடைய உருவத்தினின்றும் வாலி யைப் பார்க்கமுடியும் கொடுங்கைகள் முதலிய இடங்களில் புலி, அனுமார் முகவிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக் கின்றன, பார்க்கத்தக்கவை. தாராசுரம் தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், தஞ்சா ஆர் ஜில்லா, சென்னை ராஜதானி, கோயில் தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலைப்போன்றது. விமானம் மிகவும் உன்னதமானது. அங்கிருப்பதுபோல் இங்கும்,முன் கேர்பு ரம் சிறிதும் அகலமுமானது. விமானம் பெரியதும், உயரமு மானது. ஸ்வாமி ஐராவதேஸ்வரர். யமதீர்த்தம், யமன் சாபம் நீங்கிய தீர்த்தம், கோயிலின் முன் மண்டபத்தில் பல்லவ சிங்க ஸ்தம்பங்கள் இருக்கின்றன. உள் பிராகாரத் துக் கோபுரம் முற்றிலும் கருங்கல்லாலாயது. கோயில் மூன் மும் குலோத்துங்கள் (1178-1216) காலத்தில் புதுப்பிக்கப் பட்டதென்பர். கோயிலுக்கு முன் யமனுடைய சிலையிருக் கிறது. தென்மேற்கு மூலே மண்டபத்தில் சப்தமாத்ருக்கள் சிலைகளிருக்கின்றன். இக்கோயில் பூர்வகாலத்தில் ரீரங் கத்தைப்போல் பிராகாரங்களுடையதாயிருந்ததாம். இக் திரனுடைய யானையாகிய ஐராவதம் சாபம் நீங்கியபடியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/29&oldid=730340" இலிருந்து மீள்விக்கப்பட்டது