பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தட்ச தபோவனம் என்று பெயர் உண்டு. சிவாலயம்-லிங் கம் 12 அடி உயரம். இது ஆரிய பிரதிஷ்டை என்பர். இங்கு வியாசர் பிரதிஷ்டைசெய்த மற்ருெரு லிங்கமுமுளது. ஸ்வாமி பீமேஸ்வரர், தேவி மாணிக்க அம்மாள். சப்த ரிஷிகள் பூசித்த கேத்திரம். தீர்த்தம்-சப்த கோதாவரி, ருத்திர தீர்த்தம், ஆலயம் சோழக் கட்டிடம்; ஆயினும் சில சாளுக்கிய தாண்கள் உள. இவ்வூருக்கு தென்காசி என் றும் பெயர். கோயிலில் 1055-ம் வருடம் ஆண்ட ராஜ ராஜன் காலத்திய கல்வெட்டொன்றுளது.

  • திரிசக்தி :-வட இந்தியா சிவாலயம். நைமிசாரண்யத் திற்கருகிலுள்ளது. ஸ்வாமி திரியம்பகர், சுயம்புலிங்கம்.

திரிசூலம் :-சைதாப்பேட்டை தாலூகா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி. சிவாலயம்-ஸ்வாமி தர்ம. புரீஸ்வரர். கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் திருச்சுரமுடைய காயனர் என்றிருக்கிறது. ... — . - திரிபுவனம் :-தென் இந்தியா ரெயில்வே ஸ்டேஷன், சென்னை ராஜகானி, தஞ்சாவூர் ஜில்லா, திருவிடைமரு. அாருக்கு அருகாமையிலுள்ளது. இங்கு சோழப் பிரம்ம ஹத்தி நீங்கின சோழன் ஸ்வாமியின் கட்டளைய்ால் திரும் பிப்பார்த்த இடமாகையால் திரிபுவனம் என்று பெயர் வந்த தென்பர். கோயில் 12-ம் நூற்றண்டில் மூன்றுவது குலோத் துங்க சோழனுல் கட்டப்பட்டது. இவரது பட்டப்பெயர் திரிபுவனவீர தேவர், அதனின்றும் திரிபுவனம் என்றும் வந்திருக்கலாம். ஸ்வாமி கம்ப ஹரேஸ்வரர், (நடுக்கத்தைத் தீர்க்கவர் என்று பொருள்படும்) கேவி அறம் வளர்த்த நாயகி. கர்ப்பக் கிரஹத்திற்குப் போவதற்கு மிகவும் நீண்டகான மண்டபத்தைக் கடந்து செல்லவேண்டும். இங்கு பரமசிவத்தின் சாபாவதாரத்திற்கு மூலவிக்ரஹமும், உற்சவ விக்ரஹமுமுண்டு. தர்மபுர ஆதீனத்திலடங்கியது. பங்குனி மாதம் பெரிய உற்சவம். சீர்த்தவாரி வீர சோழன் ஆற்றில் விசேஷம். - - திருக்கட்டளி :-தென் இந்தியா, திரு+கல்+தளி= கற்கோயில், புதுக்கோட்டைக்கு 2 மைல் கிழக்கு, சிவா லயம். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/33&oldid=730345" இலிருந்து மீள்விக்கப்பட்டது