பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 பல சிவாலயங்கள் உள. (1) கபாலேஸ்வரர் கோயில். ஸ்வாமி கபாலேஸ்வரர், தேவி பார்வ்தி. சிவபெருமான் பிரம்மனது ஐந்தாம் கலையைக் கொய்த ஸ்தலமென்பது ஐதீகம். மற்ற கோயில்களிலிருப்பதுபோல் இக்கோயிலில் ஸ்வாமிக்கெதி ரில் நந்தி கிடையாது. கோயில் ராமகுளத்துக்கருகிலுள்ளது. சிவராத்திரி விசேஷம். கோயில் 1788-ம் வருடம் புதுப் பிக்கப்பட்டது. (2) மேற்கில் 1 மைல் தாத்தில் கோடீஸ் வரர் சிவாலயம். (3) உமாமஹேஸ்வரர் கோயில், மஹேஸ்வர மூர்த்தி 2 அடி உயிரம். வலதுபுறம் கங்கையின் சிலே, இடது புறம் உமாதேவியின் சிலை; இவை மூன்றும் சாளக்கிராம சிலைகள். மஹாராஷ்டிரர்கள் இவைகளைக் கர்நாடகத்தி லிருந்து சூறையாடிக் கொண்டுவந்தனராம். 1758-ம் ஆண் டில் பேஷ்வாவின் உறவினர் ஒருவரால் கட்டப்பட்ட கோயில். (4) நீலகண்டேஸ்வரர் கோயில், கோதாவரியின் வலது கரையில் உள்ளது. கோயிலிலுள்ள லிங்கம் மிகவும் பழமையானது. ஜனக மகாராஜாவால் பிரதிஷ்டை செய் யப்பட்டதென்பர். கோயில் 1747-ம் ஆண்டில் லட்சுமண சங்கரர் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. (5) பஞ்சரத்னேஸ் வரர் கோயில், வீடுப்ோன்றது. சிவலிங்கம் பூரீராமர் பிர திஷ்டை என்பர். அவர் பஞ்ச ரத்னங்களைக்கொண்டு பூசித்தபடியால் அப்பெயர்பெற்றது. 1758-ம் ஆண்டில் ய்க்னேஸ்வர தீட்சிதரால் புதுப்பிக்கப்பட்டது. (1) தில் பாண்டேஸ்வரர் கோயில், நாசிக்கிலுள்ள சிவலிங்கங்களி லெல்லாம் இதுதான் பெரியது. கோயில் 1768-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. (8) ம்ருகவியாதேஸ்வரர் கோயில், இங்கு காயத்ரி முதலிய நதிருபங்கொண்ட தேவிகளை பிரமன் தொடர, அவர்களே சிவபெருமான் காத்தருளியதாக ஐதீகம். கோயில் 1770-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. 9) காகோசங்கர் தேவாலயம், இதற்கு ராமேஸ்வரர் கோயில் என்றும் பெயர். இங்குள்ள சில்பங்கள் அழகியவை. இக் கோயிலுக்கு 5 கோபுரங்கள். இங்கு 6 அடி சுற்றளவுள்ள ஒரு பெரிய மணியுண்டு. 1756-ம் ஆண்டில் நாகோ சங்கர் என்பவரால் கட்டப்பட்டது.(10) முக்தேஸ்வரர் ஆலயம் (11) சந்திரமெளனீஸ்வரர் ஆ ல ய ம்-பஞ்சவடியிலுள்ளது. (12) பாதாளேஸ்வரர் சிவாலயம். (18) கர்ப்பூரேஸ்வரர் கோயில் இது வீரசைவர்களுடைய சிவால்யம். (14) திரியம்பகேஸ்வரர் கோயில் நாசிக்குக்கு 18 மைல் துரம். யாத்ரீகர்கள் தங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/58&oldid=730372" இலிருந்து மீள்விக்கப்பட்டது