பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சீயோனிபிரிவு :-மத்திய மாகாணம், இங்கு சிவாலயம், ஹேமாக்பண்ட் கட்டிடம், இங்குள்ள பைரோக்தன் கிராமத்தில் சிறு குகைக்கோயில் உண்டு, அதற்கு மாத்கோக்கா என்று பெயர். சிவாலயம், சீயோன் பட்டணத்தில் மஹாதேவர் கோயில்-புதிய கட்டிடம். சீவாலயம் :-இங்கு குச்மேச லிங்கம் எனும் ஜோதி லிங்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தகபுரம் -பொன்னனி தாலூகா, மலபார் ஜில்லா, சென்னே இராஜதானி, சிவாலயம்-தட்சிணுமூர்த்திகோயில், சுசீந்திரம்:-திருவாங்க ர் ராஜ்யத்தில் கன்யாகுமரிக் குப்போகும் வழியிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி பெயர் தானுமால்யன்; (தானு-சிவன்; மால் விஷ்ணு ; அயன். பிரம்மா ;) தேவி.அறம் வளர்த்த நாயகி ; பிரக்ஞா தீர்த் கம், கெர்ன்றை விருட்சம், லிங்கம் மும்மூர்த்தி ஸ்வரூப முள்ளது-மும்மூர்த்திகளுக்கும் ஆலயமுடையது. இங்குள்ள விஷ்ணுவிக்ரஹம்மதுரை திரும்லே நாயகரால் ஸ்தாபிக்கப் பட்டது. பிரம்மோற்சவம் சித்திரைமாதம். கோயில் 1890-ம் வருடம் மார்த்தாண்டவர்மரால் புதுப்பிக்கப்பட்டது. பெரிய மண்மியம் ராமவர்மா என்பவரால் 1478-ம் வருடம் கட்டப் ஆட்டது. இங்கு சுமார் 25 அடி உயரமுள்ள ஆஞ்சகேயர் சிலே இருக்கிறது.இந்திரன் பூசித்து சாபம் நீங்கிய ஸ்தலம்; அவள் சாபம் நீங்கி சுசியான படியால் சுசீந்திரம் எனப் பெய்ாபெற்றது: இங்குள்ள சில்பங்கள் 10 அல்லது 11-ம் நாம்ருண்டைச் சேர்ந்தவை. கோயிலில் ஆயிரம் வருடங்க ளுக்கு முந்திய கல்வெட்டுகள் இருக்கின்றன. இங்குள்ள ஒரு பெரிய ஸ்தம்பத்தில் சப்தஸ்வரங்கள் பேசும்படியான சிறு ஸ்தம்பங்கள் இருக்கின்றன. - சுட்டுரு :-நஞ்சங்கோட் காலுகா, மைசூர் ராஜ்யம். சோமேஸ்வரர் ஆலயம். சுப்பிரம்மண்யம் -தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம், இந்த ஜில்லாவில் இதுதான் பிரபல சிவஸ்தலம். - - . - சுயம்புநாதர் கோயில் :-வட இந்தியா, நேபாள ராஜ் யுத்திலுள்ளது. -சிவாலயம். இங்குள்ள லிங்கத்திற்கு நான்கு முகங்கள் உண்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/6&oldid=730374" இலிருந்து மீள்விக்கப்பட்டது