பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 மூர்த்தி அழகியது. ஆனிமரசம் முத்துப் பந்தல் உற்சவம் மிகவும் விசேஷம். - பட்டுக் கோட்டை :-இதற்கு அண்டமி என்றும் பெயர். சிவாலயம்-ருத்ரபதியார் அன்ன உற்சவம் ஐப்பசி மாசம் விசேஷம், - - படபாமுகம்:--வட இந்தியா, சுயம்புலிங்கம், ஸ்வாமி அனலேஸ்வரர். - படவேடு :-வேலூர் தாலுகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜகானி. இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. (1) அம்மையப்பேஸ்வரர் கோயில், (2) சோமகாதேஸ்வரர் கோயில். படாஸ் -வட இந்தியா ஜி. ஐ.பி. ரெயில் ஸ்டேஷன் சிவாலயம்-ஸ்வாமி நாகேஸ்வர். இங்கு கர்மசாலை யுண்டு. படுவனம்பூர் :-மங்களுர் காலுகா, தென் கன்னட ஜில்லா, சென்னே ராஜகானி. சிவாலயம். படேஸ்வர் -வட இந்தியா, ஆக்ராவிலிருந்து எடாவா வுக்குப் போகும் வழியிலிருக்கிறது. பாஹ் ஸ்டேஷனி லிருந்து 8 மைல் வடமேற்கு, சிவாலயம்; ஸ்வாமி வடேஸ்வர நாதர், வட விருட்சம் (ஆலமரம்) கோயில் 1646u கட்டப் பட்டது. ஜம்கா நதியின் வட கரையிலுள்ளது. - பண்டா ஜில்லா-ஐக்கிய மாகாணம்-கலிஞர் கிராமத்தில் சிவாலயம்; ஸ்வாமி பல்கண்டி மஹாதேவர். லிங்கம் 6 அடி உயரம். கோயில் கோட்டைக்குள் உளது. பாதாள கங்கை தீர்த்தம், கோடி தீர்த்தம், இங்கு மற்ருெரு சிவாலய முண்டு. ஸ்வாமி நீலகண்டேஸ்வரா. குகைக்கோயில்-கருப்பு லிங்கம், 4 அடி 5 அங்குல உயரம். இதற்கு வெள்ளியில்ை இரண்டு கண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பசுபதீஸ்வரம் -சென்னே ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம் - சத்தமாத்ருக்களுள் ஒருத்தியாகிய வைஷ்ணவி பூசித்த ஸ்தலம். வள்ளலார் கோயிலுக்கும் தர்ம புரத்திற்கும் இடையிலுள்ளது. பண்டார வடை :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா. சிவாலயம்-மச்சபுரீஸ்வரர் ஜககாம்பாள். ரெயில் ஸ்டேஷன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/71&oldid=730387" இலிருந்து மீள்விக்கப்பட்டது