பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 யிராமல்) கர்ப்பக் கிரஹத்தின் தென் புறம் கட்சிணு மூர்த்தி கிடையாது. கோயிலின் தூண்கள் மிகவும் அழகியவை. அவைகளில் ராமாயணக் கதை முதலியன சிற்பங்களால் காட்டப்பட்டிருக்கின்றன. இங்கு மல்லி கார்ஜுனர் கோயில் ஒன்று உண்டு; (787-146) கட்டப் பட்டது. (2) சங்கமேஷ்வர் கோயில். பழைய பெயர் விஜயூேஸ் வரர் கோயில், விஜயாதித்ய சத்யாஸ்ாயால் (696.783) கட்டப்பட்டது. விருபாட்சர் கோயிலுக்கு கொஞ்சம் வட மேற்கிலுள்ளது. இக் கோயிலில் தற்காலம் பூசையில்லை; இடிந்திருக்கிறது. - (3) பாப்காதர் கோயில். இது ஆதியில் சூரியன் கோயிலாயிருந்து, பிறகு வைஷ்ணவ கோயிலாகி, கடைசி யில் சிவாலயமாக மாற்றப்பட்டதென்று மிஸ்டர் கசின்ஸ் (Cousins) எண்ணுகிரும். சுவரிலுள்ள விக்ரகங்களின் பெயர்கள் கீழே செதுக்கப்பட்டிருக்கின்றன. இது கி.பி. 700-ல் கட்டப்பட்டது. (4) காசிவிஸ்வ காதர் கோயில். (5) காலக காதர் கோயில். வட இந்திய ஆரிய கட்டடம், அடிபீடம் விசித்திரமானது. ஆற்று நீரால் அழிக்கப்படாதபடி கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றி உயரமான பீடம் கட்டப்பட்டிருக்கிறது. (6) கட்சித்தேஸ்வரர் கோயில். வட இந்திய ஆரிய கட்டடம். - () ஜம்புலிங்கம் கோயில். (5) சக்தி;சேகரர் கோயில். (9) மல்லிகார்ஜுனர் கோயில்-சாளுக்கிய கட்டடம். (10) சங்கர நாராயணர் கோயில். பத்மநாதபுரம் -திருவாங்கூர் ராஜ்யம். சிவாலயம். பத்மகேரு :-காங்குநெறி தாலுகா, திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜகானி. சிவாலயம்-சுவாமி நெல்லே யப்பர். - - பத்ரவடம் -வட இந்திய கங்காத்வாரத்திற்கு அருகி லுள்ளது. சிவாலயம்-ஸ்வாமி பத்ரேசர் சுயம்புலிங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/74&oldid=730390" இலிருந்து மீள்விக்கப்பட்டது