பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 விருட்சம். திருவாரூரில் இறங்கி 7 மைல் போகவேண்டும். சிவபெருமான் சுந்தர மூர்த்திக்குக் கூத்தாடி காட்சி கொடுத்த ஸ்தலம். திருஞான சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. விடங்க ஸ்தலங்களிலொன்று. - பஸ்தர்-சண்டி பிரிவு, மத்ய மாகாணம், சிவாலயம். ஸ்வாமி.கந்தேஸ்வரர், தேவி.மோடா தேவி தீர்த்தங்கள் , சங்குனி, தான்குன். பாகாலா :-சென்னை ராஜதானி; சித்துருக்கு 28 மைல். சிவாலயம். ஸ்வாமி-சந்திரசேகரர். ரெயில் ஸ்டேஷன். பாகர்கன்ஜ் பிரிவு-வங்காள ராஜதானி. போன பாலியா கிராமம், சிவாலயம் பழையது, சுயம்பு லிங்கம்; சிவராத்திரி விசேஷம். பாகல்பூர் பிரிவு -வங்காள ராஜதானி. (1) கர்ணு கிராமம். (கர்ணன் + நகரம்) சிவாலயம். ஸ்வாமி.பரமசிவம், தேவி-பார்வதி. (2) ரீககர் சிவாலயம், இதில் பல கல் வெட்டுகள் உள. - பாகலி -ஹர்ப்பனஹல்லி தாலுகா, பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி; சிவாலயம். ஸ்வாமிகள்ளேஸ்வரர், சாளுக்கிய சில்பம், ஹர்ப்பனஹல்லிக்கு 8 மைல். பாகேஷ்வர்-டுமாவோன் ஜில்லா, ஐக்கிய மாகாணம, காக்கோடம் ரெயில் ஸ்டேஷனுக்கு 6 மைல் சிவாலயம். ஸ்வாமி-பாகேஸ்வர், (வியாக்ரம் = புலி) இங்கு தர்ம சத்தி ாங்கள் உள. கோமதியும்,சர்ஜூவும் கூடுமிடம், அல்மோரா வுக்கு 28 மைல் வடக்கு. கடயூர் அரசர்களால் (2500 BC700 AD) கட்டப்பட்ட கோயில் என்பர். டுமாவோன் சில்பம், மார்க்கண்டேயர் பூசித்த ஸ்தலம். பரமசிவம் புலி வடிவ மாய்த் தோன்றியபடியால் பாகேஷ்வர் எனப் பெயர் உண்டாயிற்று. மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வாமிக்கு வாகீஸ்வரர் என்றும் பெயர். பங்கல்:-நைஜாம் ராஜ்யம், மத்ய இந்தியா, நால் கொண்டா ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி.பாஞ்சேஸ்வரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/13&oldid=730403" இலிருந்து மீள்விக்கப்பட்டது