பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாங்கியூர் -தார்வார் ஜில்லா, ஆறுவத்துகம்பட ஆலயம். 60 தூண்கள் உடைய கோயில், இது ஆதியில் சிவாலயமா யிருந்து பிறகு பிஜபூர் சுல்தானல் மசூதியாக்கப்பட்டது. தற்காலம் மிகவும் பழாய்க் கிடக்கிறது. பாச்சிலாச் சிராமம் :-(திரு) இது சிருவாசி எனவும் வழங் கப்படுகிறது. திருவானைக் காவலுக்கு 3 மைல் வடமேற்கு. சென்னை ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா; திருச்சி ாாப்பள்ளியிலிருந்து 6 மைல், சிவாலயம். ஸ்வாமி-மாற் மறிவரதர், தேவி-பாலசெளந்தரி, விசாலாட்சி; வன்னி மரம்; பிரம தீர்த்தம், அன்னமாம் பொய்கை, முயலக தீர்த்தம். இங்குள்ள நடராஜ மூர்த்திக்குப் பின்னிய சடையும், பக்கத்தில் அசுரனும் உண்டு. திருஞான சம் பந்த மூர்த்தி கொல்லி மழவன் எனும் அரசனுடைய குமாரத்திக்கு முயலகன் எனும் வியாதியைத் தீர்த்த ஸ்தலம். திருஞான சம்பந்த மூர்த்தி பதிகம்பாடிய காரணத்தில்ை முயலகனுக்கு மோட்சம் கிடைக்க, நடராஜர் சர்ப்பததின் மீது நடனமாடினதாக ஐதிகம். சபாநாதர் சிரத்தில் கிரீடம் உளது. சுந்தர மூர்த்தி பதிகம்பாடிப்பெற்ற செப் புக் காசுகள் பொன்னுய் மாறின ஸ்தலம். பாசரகோடு :-பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி , சோமேஸ்வரர் கோயில், ஸ்வாமி ஆரண்ய விடங்கர், ஆரண்ய சீர்த்தம். பாசராலு :-மைசூர் ராஜ்யம், தற்காலம் நாகேஸ்வர் கோயில் என வழங்கப்படுகிறது. சாளுக்கிய சில்பம். பாதுர் :-(திரு) திருவள்ளுர் தாலுகா, சென்னை ராஜ தானி. திருவள்ளுர் ஸ்டேஷனுக்கு 5 மைல் வடமேற்கு சிவாலயம். ஸ்வாமி-பாசூர் நாதேஸ்வரர் அல்லது பாசுப தீஸ்வரர், வாகீஸ்வரர்; தேவி-பசுபதி நாயகி யம்மை, சுயம்புவல்லி, சோழ தீர்த்தம். சிவபெருமாள் மூங்கிலடி யில் தோன்றிய ஸ்தலம். சிவபிரான் சோழனுக்கு ஒரு காரணம்புற்றி பாம்பாட்டியாகத் திருவுருகொண்டு ஆடல் காட்டியருளிய ஸ்தலம். திருஞான சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற ஸ்தலம். பிரம்மோற்சவம் வைகாசி மாசம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/14&oldid=730404" இலிருந்து மீள்விக்கப்பட்டது