பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாஜித்பூர் :-ஐக்கிய மாகாணம். இங்கு இரண்டு சிவாலயங்கள் உண்டு: (1) ஜாஜ்மெள இதன் பழைய பெயர் சித்தபுரீஸ்வரம்; பிரத்தேஷ்வர், தேவி-சிந்தாதேவி, (2) ஷாஜஹான் பூர் பிரிவு, பிலிபிட் கிராமம், கெளரி சங்கர் கோயில். பாஜெளரா:-வட இந்தியா, காங்கிரா ஜில்லா, ரவி நதிக்கர்ைபிலுள்ளது, சிவாலயம்; 85 அடி உயரம். ஆரிய சில்பம். மோடார் வண்டுகள் மூலமாகப் போகலாம். பாஹுர்-புதுச்சேரிக்கு அருகாமையி அள்ளது, சென்னை ராஜதானி, சிவால்யம் பல்லவ சில்பம். ஸ்வாமி. மூலேஸ்வர், கல்வெட்டுகளில் மூலஸ்தான முடையார் என்றிருக்கிறது. இங்கு பல கல் வெட்டுகள் உண்டு. பாஸ்ஸால்ா:-திருவாங்கூர் ராஜ்யம், சிவாலயம். பாஷான் :-பூ ைஜில்லா, பம்பாய் ராஜதானி, சிவா லயம். கோயில் ஷாஹா) மகா ராஜாவின் தாயாரால் சுமார் 1708-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சக்ாதீர்த்தம், சிவராத்திரி விசேஷம், பிகaர் சமஸ்தானம் -வட இந்தியா, இங்குள்ள சிவா லயங்கள் :-(1) கோட்பூர் பிரிவு நாகா கிராமம், சிவாலயம். ஸ்வாமி-நீலகண்ட மஹாதேவர். (2) பிலரா பிரிவு புக்களா கிராமம்; மஹாதேவர் சிவாலயம். இதற்கு அருகில் பார் வதி கோயில் பிரத்யேகமாக உளது. சுமார் 100 வருடங். களுக்கு முன் கட்டப்பட்டது. (3) நாடோல் கிராமம், சோமேஸ்வரர் கோயில், பழைய சிவாலயம். (4) சத்ரி ஜோகேஷ்வர் சிவாலயம். (5) ஜஸ்வந்த பூர் பிரிவு ரத்னபுரி கிராமம்; சிவாலயம் 12-ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டது. (6) கேர் கிராமகூபம், இங்கு 3 சிவாலயங்கள் உள. மேற்கு பார்த்த கோயில்கள், (7) காகெளர் பட்டணம் முரளிதரர் கோயிலில் இங்கு ஒரே பிரகாரத்தில் அக்கம் பக்கமாய் லிங்கமும், கிருஷ்ண விக்ரஹமும் பிரதிஷ்டை செய்யப்பட் டிருக்கின்றன. (3) பாலி கிராமம், சிவாலயம் 1143-u குமாரபாலர் என்பவரால். கட்டப்பட்ட அழகிய கோயில், (9) பிகனிர்பட்டணம்-புதிய சிவாலயம் அழகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/24&oldid=730414" இலிருந்து மீள்விக்கப்பட்டது