பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிராக்ஜோதிஷ புரம் -வட_இந்தியா, கோஹக்திக்கு சமீபம், சிவாலயம். ஸ்வாமி.கபிலேஸ்வரர்,தேவி-காமாட்சி. பிரம்மபுத்ா நதியின் மத்தியில் ஒரு சிறு குன்றின்மேலுள்ள சிவாலயம். - பிரம தேசம் :-அம்பா சமுத்திரம் தாலுகா, திருநெல் வேலி ஜில்லா, சென்னை ராஜதானி, கைலாசநாத ஸ்வாமி கோயில். இதற்குப் பெரிய தெப்பக்குளம் உண்டு. கோயிலிலுள்ள சோமவார மண்டபம் பார்க்கத் தக்கது. கோயில் நாயக்க அரசர்கள் காலத்தியதாயிருக்கலாம். பெரிய கோபுரம் மேற்கு பார்த்தது. நிலைகளையுடையது. கிழக்கு கோபுரம் நாய்க்க அரசர்கள் மந்திரியாகிய வீர ராகவ முதலியாரால் கட்டப்பட்டது, சுமார் 400 வருடங் களுக்கு முன். மதுரை கோயிலே ஒத்திருக்கிறது. கோயில் தெற்கே பார்த்தது. கர்ப்பக்கிரஹத்தில் தும்புரு நாரதர்க ளுடைய சிலைகளிருக்கின்றன. பிரம்ம கபாலம் -வட இந்தியா பதிரிகாஸ்ரமத்திற்கு சமீபமுளது. சிவாலயம் ; ஸ்வாமி-கபாலேஸ்வரர். இது கங்கை உற்பத்தியாகுமிடம். பிரம்மபுரம் :-தென் இந்தியா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி - பிரம்மேஸ்வரர், தேவி - நாகவல்லி; பிரம்மா பூசித்த கேடித்திரம். பிரபாசம் -வட இந்தியா சிவாலயம். ஸ்வாமி - சசி பூஷணர். சுயம்புலிங்கம். பிரயாகை :-(அலஹாபாத்) வட இந்தியா ரெயில் ஸ்டே ஷன். கங்கையும், யமுனையும் சங்கமமாகுமிடம்; திரி வேணி சங்கமமம் என்று பெயர். சரஸ்வதி நதி அந்தர் வாஹீனியா யிருப்பதாக ஐதீகம். சிவாலயம், ஸ்வாமி. சோமேஸ்வரர், கேவிபோர்வ்தி; சுயம்புலிங்கம்; திரிவேணி தீர்த்தம். கோயில் யமுனேயின் கீழ்க்கரையிலுள்ளது. . பிறம்பில் :-பிறம்பூர் என்றும் பெயர். சென்னை ாஜதானி, தென் இந்தியா, மங்கநல்லூர் ஸ்டேஷனி லிருந்து 5 மைல், தேவார வைப்புஸ்தலம். தற்காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/26&oldid=730416" இலிருந்து மீள்விக்கப்பட்டது