பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஸ்தலம். தேவார காலத்தில் ஸ்வாமி பெயர் கோளபிரான். பிரம்மோற்சவம் வைகாசி மாசம். மூவர் பாடல் பெற்ற கேஷத்திரம். புகலூர் வர்த்தமனிச்சரம் (திரு)-திருப்புகலூர் கோயிலின் வடபுறமுள்ளது, புஷ்பமாலை தொண்டுசெய்து முருக நாயனர் வசித்த ஸ்தலம். மேகங்கள் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி - வர்த்தமானிஸ்வரர், தேவி கருந்தார் குழலியம்மை, அக்னி தீர்த்தம், திருஞாஸ்சம்பந்தர் பாடல் பெற்றது. புட்டிகே :-மங்களுர் தாலுகா, தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி; சோமநாதர் சிவாலயம்-பல கல்வெட்டு களுடையது. - புடைமருதூர் :-அம்பா சமுத்திரம் தாலுகா, திருநெல் வேலி ஜில்லா, சென்னை ராஜதானி; நாரம்புநாத ஸ்வாமி கோயில், தேவி.கோமதியம்மன். இங்கு மாறன் சடையன் பாண்டியனது கல் வெட்டொன்று உளது. இங்கு மற்ருெரு சிவாலயமுண்டு. ஸ்வாமி - சென்னபுரீஸ்வரர், தேவி-மங்கள நாயகி. புதிய கோயில் சுமார் 400 வருடங் களுக்கு முன் கட்டப்பட்டதென்பர் ; 5 கிலேக் கோபுரம், ஸ்வாமி சங்கிதியும், அம்மன் சந்நிதியும் அக்கம் பக்கமா யிருக்கின்றன. நாயக்க அரசர்கள் காலத்தியதென்பர். கோயில் ஸ்டேஷனுக்கு 3 மைல் தூரம். தாமிரபர்ணி நதிக்கரையிலுள்ளது. புத்துக் கோட்டை :-சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி.அகஸ்தீஸ்வரர், தேவி ஆகந்தவல்லி ; அகஸ்திய தீர்த்தம். புத்தூர் :-(திரு) சென்னை ராஜதானி. பிரான் மலைக்கு 15 மைல் தென் கிழக்கு. உமாதேவியார், லட்சுமி, பூசித்த கேடித்திரம். சிவகங்கையிலிருந்து 22 மைல். ஸ்வாமி. புத்துனர் ஈஸ்வரர், தேவி.சிவகாமியம்மை. சீதளி தீர்த்தம், கருட தீர்த்தம், கொன்றை விருட்சம். இங்குள்ள பயிரவர் சங்கிதி விசேஷம் திருஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/31&oldid=730422" இலிருந்து மீள்விக்கப்பட்டது