பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 புழல் -சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி-திருமூலஸ்தான முடைய காயர்ை. புள்ளமங்கை :-(திரு) இதற்கு ஆலந்துறை என்றும் பெயர் உண்டு. சிவபெருமான் ஆலத்தை உட்கொண்ட கேஷத்திரம். தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். ஐயம் பேட்டைக்கு 2 மைல். ஸ்வாமிஆலம் தவிர்த்த ஈஸ்வரர், பசுபதி நாதேஸ்வரர், தேவி-அல்லியங்கோதை, கோயிலி லுள்ள காளிக்கு தலைபலி யிடுவதுபோல் ஒரு சில்பமுண்டு. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. பரகேசரி வர்மன் முதலிய சோழ அரசர்கள் காலத்திய கல்வெடடுகள் பல உள. இங்கு பசுபதி கோயில் என்றும் ஒரு சிவாலய முண்டு. ஸ்வாமி.பசுபதிநாதேஸ்தரர், தேவி-பால்வண்ண நாயகியார், சிவ தீர்த்தம் , திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. புறம்பயம் :-(திரு) திருப்புரம்பியம் என்று அழைக் கப்படுகிறது. தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, ఫీడ్లి 6 மைல் போகவேண்டும். இன்னம் பருக்கு 2 மைல் வடமேற்கு. ஸ்வாமி-சாட்சிகாதேஸ்வரர் (பழைய பெயர் ஆதித்யேஸ்வரர்) தேவி-கரும்பன்ன சொல் அம்மை, பிரம தீர்த்தம், புன்னேவிருட்சம், பிரளயத்திற்குப் புறம்பாயிருந்தமையால் புறம்பயம் எனப் பெயர் பெற்றது. (புறம்பு + அயம் = நீர்) திருஞானசம்பந்தர் அரவத்தால் இறந்த வணிகனே எழுப்பிய ஸ்தலம். இங்கு தட்சிணு மூர்த்திக்குப் பிரத்யேகமாகக் கோயிலுண்டு ; விசேஷ மானது. இங்கு குளத்தருகிலுள்ள பிள்ளையாருக்குப் பிரளயங்காத்த பிள்ளையார் என்று திருநாமம். வன்னியும் கிணறும், லிங்கமும் வணிகப் பெண்ணுக்கு சாட்சியாகிய ஸ்தலம். மூவர் பாடல் பெற்றது. சுந்தோப சுந்தர் பூசித்த ஸ்தலம். - புறவார் பனங்காட்டுர் :-(திரு) பனங்காட்டுர் எனவும், பனையபுரம் எனவும் வழங்கப்படுகிறது. சென்னை ராஜ தானி, விழுப்புறம் ஸ்டேஷனுக்கு 53 மைல். வித்யாதரர், அகஸ்தியர், பூசித்த ஸ்தலம். ஸ்வாமி-பனங்காட்டீஸ்வரர்; தேவி-திருப்புறவமின்னம்மை, அமிர்தவல்லியம்மை, ஸ்தல 5. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/35&oldid=730426" இலிருந்து மீள்விக்கப்பட்டது