பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சிறு மலையிலுள்ளது. வன்மீக தீர்த்தம், வால்மீகி ஆசிர மம் அருகிலுள்ளது என்பர். கோயில் யுத்த காலத்தில தாக்கப்பட்டு கொஞ்சம் கிலமாயிருக்கிறது. பெருவாரம் :-திருவாங்கூர் ராஜ்யம்-சிவாலயம், பெருவேளுர்:-(திரு) கரட்டூர் ஐயன் பேட்டை என வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி, காவீரத்திற்கு 2 மைல், வடமேற்கு. திருப்பாசூரிலிருந்து 8 மைல், கெளதமர், சக்தி பூசித்த ஸ்தலம், ஸ்வாமி.பிரியா ஈஸ்வரர், தேவி-மின்னனையாளம்மை, மூஷிக தீர்த்தம், திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. பெல்காம் ஜில்லா:-பம்பாய் ராஜதானி, கோரக் பட்டினத்திற்கு 3 மைல் தூரம், மஹா லிங்கேஸ்வரர் கோயில், வடக்கு பார்த்தது. கோரக் நீர் வீழ்ச்சி; இங்கு இன்னும் 2 சிறு ச்வாலயங்கள் அருகில் இருக்கின்றன. பெல்காம் கோட்டையில் ஒரு சிவாலயமுண்டு; இது பாழடைந்திருக் கிறது. முக்கிய்வாயிலில் தாண்டவமாடும் ஈஸ்வரன் பக்கலில் பிரம்மாவும், மஹா விஷ்ணுவும் இருக்கின்றனர்; அழகிய சில்பம். பெளகாமி :-பெல காமி என்றும் அழைக்கப்படு கிறது. மைசூர் ராஜ்யம், வீமோகா ஜில்லா, ஷிகார் பூர் தாலுகா. இங்கு ஐந்து சிவாலயங்கள் உள. (1) கேதா ரீஸ்வரர் கோயில், மூன்று சங்கிதிகளையுடையது. சாளுக்கிய கட்டடம்,(பெல்காமி கேதாரிஸ்வரர் கோயில்)மண்டபத்தின் கூரை மகம்மதியர்களால் அழிக்கப்பட்டது. ஹோய்சல பிருது இங்குளது. (சலன் சார்தாலத்தைக் கொல்வது) இக் கோயில் ஜக்கணுசாரியால் கட்டப்பட்டதாம். (2) பஞ்ச லிங்கேஸ்வரர் கோயில், (3) கைடபேஸ்வரர் கோயில், (4) சோமேஸ்வரர் கோயில், (5) திரிபுராந்தகேஸ்வரர் கோயில். பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் பஞ்சபாண்டவர்க ளால் கட்டபட்டதென்பது ஐதிகம்; மிகவும் கிலமாயிருக் கிறது. சாளுக்கிய கட்டடம். தற்காலம் இவை பாழா யிருக்கின்றன. ஆயினும் சில அழகிய சில்பங்களுடைத்தா யிருக்கின்றன. --, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/45&oldid=730437" இலிருந்து மீள்விக்கப்பட்டது