பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பென்குடி :-திருப் பென்குடி என்று அழைக்கப்படு கிறது. சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி.சொக் கேஸ்வார், தேவி.சிவகாமி, ஹனும தீர்த்தம், சிபிச்சக்ர வர்த்தி பூசித்த ஸ்தலம். பெனுகொண்டா :-பெனுகொண்டா தாலுகா, சென்னை ராஜதானி, அநந்தபூர் ஜில்லா, பெங்களுர் குண்டக்கல் ரெயில் ஸ்டேஷன் - சிவாலயம். அவிமுக்தேஸ்வரர் கோயில், விஜயநகர சில்பமமைந்தது. பெஜ்வாடா-கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி, ஈஸ்ட் கோஸ்ட் ரெயில் ஸ்டேஷன். ஊரின் பழைய் பெயர் கல்வெட்டுகளில் ராஜேந்திர சோழபுரம் என்றிருக் கிறது. கிருஷ்ணு நதியின் கரையிலுள்ளது.சிவாலயம். சுவாமி.மல்லேஸ்வரர், அல்லது ஜெயசேனர். (இக் கோயி லைச் சார்ந்த கனக துர்க்கையின் கோயில் மிகவும் பிரபல மானது) அகஸ்தியர் பூசித்த ஸ்தலம். இங்குள்ள இந்திர தீபம் எனும் மலையில் அர்ஜுனன் தவம் புரிந்து சுவாமியிட மிருந்து பாசுபதாஸ்திரம் பெற்றதாக ஐதிகம், சுவாமி அர்ஜூனனுடன் யுத்தம் புரிந்தமையால் மல்லேஸ்வரர் எனப் பெயர் வந்தது. கலியுகத்திற்கு முன் ஸ்வாமிக்கு ஜெயசேனர் என்று பெயர் இருந்ததாம். இவ்வூரில் இன்னும் இரண்டு சிவாலயங்கள் உள. (1) மல்லிகார் ஜனர் கோயில், (2) நாகேஷ்வரர் கோயில். - பேரூல் ஜில்லா :-மத்திய மாகாணம், (1) போபாலி கிராமம், சிவாலயம். குகைக் கோயில், சுவாமி மஹா தேவர், தேவி-பார்வதி. (2) சல்பார்டி கிராமம், சிவாலயம் குகைக்கோயில்; சுவாமி.மஹா தேவர். - - - - பேரூர்:-மைசூர் ராஜயம், தேவாங்கரே தாலுகா, சிவாலயம். சுவாமி.கள்ளேஸ்வரர். பேணு பெருந்துறை :-திருப்பந்துறை என்றும் வழங் கப்படுகிறது. கும்பகோணத்திற்கு 7 மைல். தென் கிழக்கு. தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, பிரமன் பூசித்த கேத்திரம். சுப்பிரமணியருக்கு சிவ பிரான் அருள்கொடுத்த ஸ்தலம் என்பது ஸ்தல் புராணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/46&oldid=730438" இலிருந்து மீள்விக்கப்பட்டது