பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாம். சபாநாயகர் மண்டபம் அழகிய சில்பமமைந்தது. இங்கு கோமுனி, பட்டிமுனி சிலை உருவங்கள் உள. அன்றியும் இங்குள்ள கஜசம்ஹார மூர்த்தி, பிட்சாடனர், ஊர்த்தவத்தாண்டவேசர், காளி, வீரபத்திரர், அகோர வீரபத்திரர்,கணேசர்,சுப்பிரமணியர் சிலைகள் அழகியவை. மேலும் யோகிகள் யோகாப்பியாசம் முடிந்ததும், பழைய ரூபம் பெறுவதற்கு முன் இருக்க வேண்டிய முத்திரை செதுக்கப்பட்டிருக்கிறது. கோபுரம் 5 நிலைகளுடையது, சிறியது; பிற்காலத்தில் கட்டப்பட்டது. பீடம் மாத்திரம் கருங்கல்லாலாயது. சில வருடங்களுக்கு முன் உள் பிராகாரம் புதுப்பிக்கப்பட்டது. இரண்டாம் பிராகாரத் தில் சிங்கவாபி எனும் தீர்த்தம் உண்டு. இங்குள்ள காளி கோயிலிலிருந்து பார்த்தால் சபாநாயகரது மேல் தாக்கிய பாதம் காணப்படும். இதை திவ்ய தரிசனம் என்பர். கோயிலுக்குள் ஒரு விஷ்ணு ஆலயமுண்டு; ஸ்மார்தத பூஜை, இதற்கு உற்சவமுமுண்டு. இவ்விடம் 18-ஆம் அாற்ருண்டில் ஆண்ட இரண்டாம் விக்கிரம கோழனுடைய கலவெட்டுகள் உள. மூலஸ்தானம் பழைய கட்டடமர்ம். சோழ சில்பம்.சபாநாயகர் மண்டபம் 1750-ஞ்ஸ் கட்டப் பட்டதாக பெர்கூசன் துரை எண்ணுகிருரர். இதிலுள்ள ஒரு ஸ்தம்பத்தில் ஒரு சிப்பாய் தன் துப்பாக்கிக்கு மருந்து போடுவதுபோல் செதுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மோற் சவம் பங்குனி மாசம். இதில் பத்தாம் நாள் நடக்கும் நடராஜப் பெருமான் உற்சவம் பிரபலம். நடராஜரை எழுந்தருளச் செய்யும் பொழுது தண்டுகள் முறிவது அதி சயச் செய்கை. காற்று கடவு உற்சவம் ஆனிமாசம். கோயிலின் அருகாமையில் வசிஷ்டர் யாகஞ் செய்த இடம் காட்டப்படுகிறது. இங்குள்ள மணலானது விபூதியாகப் பாவிக்கப்படுகிறது. கோயிலின் துவஜஸ்தம்பத்தில் ஒரு புறம் சுந்தரமூர்த்தி உருவம் இருக்கிறது. நடராஜ சபைக்குக் கிழக்குப்புறம் கருங்கல்லுக்குப் பதிலாகமர்த்தர் லாகிய சில்பம் இருக்கிறது. பூர்வகாலத்தில் இது கருங் கல்லாலாயதாம்; அதில் ஒரு தேரை இருந்ததாகவும் அதை ஆவடையார் கோயில் கல் தச்சனகிய ராமலிங்கம் என்பவரின் புதல்வன் கண்டுபிடித்து எடுத்துவிட்டதாகவும், பிறகு அதை மரத்தால் செய்து வைத்ததாகவும் சொல்லப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/48&oldid=730440" இலிருந்து மீள்விக்கப்பட்டது