பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இக்கோயிலுக்குள் வன்மீகேசுரர்ஆலயம் உளது. சுவாமி. வன்மீகேசர், தேவி-புண்யகாரிணி. மேற்கு நோக்கிய சங்கிதி. சூரபத்மனைக் கொன்ற பாபம் தீர சுப்பிரமணியர் வான்மீகேசரைப் பூசித்ததாக ஐதிகம். போலவரம் :-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம். சிவராத்திரி விசேஷம். போஜ்பூர் :-போபால் ராஜ்யம், வட இந்தியா, சிவா லயம்; 66 அடி சதுரம், சிவலிங்கம் 73 அடி உயரம், 17 அடி 8 அங்குலம் சுற்றளவு. சுமார் 12 அல்லது 18-ம் நூற்ருண்டில் கட்டப்பட்டது என்பர். - பொன் அமராவதி :-திரு மெய்யம் தாலுகா, புதுக் கோட்டை சமஸ்தானம், சிவாலயம். சோழ அரசனுகிய ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. பழைய சோழ கிட்டடம், - பொன்னேரி.-ஈஸ்ட்கோஸ்ட் ரெயில் ஸ்டேஷன். சென்னபட்டணத்திலிருந்து 28 மைல்; சென்னை ராஜ தானி, சிவாலயம். சுவாமி பெயர்-அகத்தீஸ்வரர், தேவி. ஆநந்த பீஸ்வரி, கோயிலுக்கு எதிரில் சிறு குளமுண்டு. கோயில் ஸ்டேஷனுக் கருகிலுள்ளது. சித்ராபவுர்ணமி யன்று இக் கோயிலின் சிவபெருமான் விருஷபவாஹனத் திலும், அருகிலுள்ள விஷ்ணு ஆலயத்தின் மஹாவிஷ்ணு கருடவாஹனத்திலும் சந்திக்கும் உற்சவம் விசேஷம்; இதற்கு சந்திப்பு உற்சவம் என்று பெயர். இதற்கு 5 மைல் தாரத்தில் திருப்புன்னவாயல் என்று ஒரு சிவ rேத் திரமுண்டு, பொன்னேரிக்கு 2 பர்லாங் துர்ாம். சின்ன காலணம் எனும் கிராமத்தில் ஒரு சிவாலயமுண்டு, பக்க லில் பெரிய காவணம் எனும் ஊரில் ஒரு கோயிலுண்டு. சுவாமி பெயர்-எழுமுனிஸ்வரர். பொற் பந்தல் :-காஞ்சீபுரம் தாலுகா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி; பழைய சிவாலயம், சுவாமி. அக்னிஸ்வரர், தேவி-இனிமொழியம்மை, தெற்கு நோக்கிய வாசல். பழைய காலத்தில் பொன்லைாய பந்தர் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/52&oldid=730445" இலிருந்து மீள்விக்கப்பட்டது