பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மணமங்கை :-சென்னை ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி.மங்களேஸ்வரர், தேவி. மங்களகாயகி, பாண்டவர்கள் பூசித்த ஸ்தலம் என்பர். மணலூர் :-சென்னை ராஜதானி, மதுரை ஜில்லா, சிவாலயம். மதுரைக்கு 6 மைல். மணிக் கிராமம் :-இதற்கு மணிக்கோயில் என்றும் பெயர். சிவாலயம்; சீர்காழிக்கு 1 மைல், வைப்புஸ்தலம். மணிகரபெரி :-உடுபி தாலுகா, தென் கன்னட ஜில்லா, சென்னே.ராஜதானி, சோமநாதேஸ்வரர் கோயில். மணிமங்கலம் :-சைதாப்பேட்டை தாலுகா, செங்கல் பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி, தர்மேஸ்வரர் கோயில், தேவி வேதவல்லி. கோயில் 11-ஆம், நூற்ருண்டில் கட்டப் பட்டது. கர்ப்பக்கிரஹம் மஹாப்லிபுரம் சகாதேவன் ரதம் போன்றது. இங்கு கைலாச நாதர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு. - மணிபூர் :-வட இந்தியா, சிவாலயம், ஸ்வாமி . மஹா தேவர். தேவி-பார்வதி. ‘. . மணிவாக்கம் -சென்னை ராஜதானி, சிவாலயம். சுவாயி-மருதேஸ்வரர், தேவி-மரகதவல்லி, பாதாள கங்கை தீர்த்தம். மத்தகிரி -மைசூர் ராஜ்யம், தும்கூர் ஜில்லா, தும்கூரி லிருந்து 24 மைல், மது + கிரி=மத்த கிரி என்ருயதென்பர். சிவாலயம், சுவாமி-மல்லேஸ்வார், கோயிலின் கொடுங்கை களில் புருக்கள் தங்கியிருப்பதுபோல் சில்பங்கள் உள. (சிவாலயத்தின் பக்கலில் ஒரு ஜைன ஆலயமுளது.) மத்ரா :-வட இந்தியா, (பிரபல விஷ்ணு கேஷத்திரம்) இங்கு ஒரு சிவாலயம் உண்டு. ஸ்வாமி.பூதேஷ்வர் மஹா தேவ், கோயிலின் வெளிப்பிராகாரம மராட்டிய அரசர்க ளால் கட்டப்பட்டது. இங்குள்ள சிறு மலைக்கு கைலாசம் என்று பெயர். இதன் தாழ்வரையில் கோகர்ணேஸ்வரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/56&oldid=730449" இலிருந்து மீள்விக்கப்பட்டது