பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சுவர்களையும் 14 கோபுரங்களையும் மாட வீதிகளையும் இடித்துத் தரைமட்ட மாக்கின' என்று ஒரு மகம்மதிய ஆசிரியர் கூறியுளார். விஜயநகர அரசனகிய புக்க தேவரது குமாரயை குமார கம்பன உடையார் என்பவர் மதுரையை மகம்மதியர்களிடமிருந்து மீட்டு, பூட்டப்புட் டிருந்த ஆலயத்தைத் திறந்து, பூஜைக்கு அருகாக்கினர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் மூன்று பிராகாரங்களை உடையது ; விஸ்தீர ணம் இரண்டு பக்கம் 720-729 அடி உள்ளது ; மற்ற இரண்டு பக்கங்கள் 884-852 அடி உள்ளது; மொத்த விஸ்தீரணம் சுமார் 25 ஏகாா. இங்கு 9 கோபுரங்கள் உள்ளன. பெரிய கோயில் விமானம் சுமார் கி. பி. 1520-ஆம் ஆண்டில் சொக்கநாத நாயகரால் கட்டப் பட்டதாம். மீனாட்சி யம்மன் கோயில் பெரும்பாலும் திருமலை நாயகர் காலத்தில் கட்டப்பட்டதாம். ஆயிரக்கால் மண்டபம் நாயக்க அரசர்களிடம் தளகர்த்த்னயிருந்த அரியநாயக முதலியாரால் கி. பி. 1560 (சுமார்) கட்டப் பட்டது; இதில் 985 கால்கள்தானிருக்கின்றன; முதலி யாரது சிலை உருவம் இம் மண்டபத்தின் முன் பாகம் உள்ள ஒர் தானில் செதுக்கப்பட்டிருக்கிறது. புது மண்டபம் அல்லது வசந்த மண்டபம் கோயிலுக்கு கிழக்கில் வெளியில் உள்ளது; திருமலை நாயகர் காலத்தியது. இதற்குக் கிழக்கில் ராய கோபுரம் சுமார் 1623-1885-ல் ஆரம்பிக்கப்பட்டு, முடிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது; இதன் அடிப்பாகம் 174 அடி உயரம் ; 107 அடி அகலம்; வாயிற்படி 60 அடி உயரம். ஸ்வாமி கோயிலுக்குள் உள்ள ஒரு பெரிய மண்டபம் பெரிய வீரப்ப நாயகரால் கட்டப்பட்டதாம்; இவர் காலம் 1500-1578. தற்காலம் மீட்ைசி நாயக்கர் மண்டபம் என்று சொல்லப்படுகிறது முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டதாம். கலியாண, மண்டபம் 1707-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. நான்கு வெளி கோபுரங்கள் கம்பன உடையார் காலத்தில் கட்டப் பட்டன வென்பர்; இவர்தான் மதுரையை மகம்மதியர்க ளிடமிருந்து மீட்டவர்; இவர் காலம் சுமாா 1872 கி. பி. ஆகும். ஸ்வாமி கோயிலும் அம்மன் கோயிலும் அக்கம் பக்கமாயிருக்கின்றன. மீட்ைசி அம்மன் கோயிலின் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/59&oldid=730452" இலிருந்து மீள்விக்கப்பட்டது