பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荡6 முன் புறத்திற்கு அஷ்ட சக்தி மண்டபம் என்று பெயர். ஸ்வாமி கோயிலின் கிழக்கு கோபுர வாயிலாக சாதாரண மாகப் பக்தர்கள் புகுவதில்லை. உற்சவாதிக ளெல்லாம் அம்மன் சந்நிதி வாயிலாகத்தான் நடத்தப்படுகின்றன. இதற்குக் காரணம், விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் கோயிலின் வேலையாட்களுக்கு இறையிலியாக (வரியில்லா மல்) விடப்பட்ட மான்யங்களுக்கு, வரி தண்ட உத்யோ கஸ்தர்கள் முயல, அதைத் தவிர்ப்பதற்காக ஒரு கோயில் வேலையாள் இக் கிழக்கு கோபுரத்திலேறி கீழே விழுந்து மடிந்ததால், இக் கோபுரத்தின் மூலமாக யாரும் புகுவ தில்லையாம். இக் கோபுரம் 9 கிலே யுடையது. சுந்தர பாண்டியல்ை 1218u கட்டப்பட்டது. வடக்கு கோபுரக் திற்கு பல வருடங்களாக மொட்டை கோபுரம் என்று பெயர் இருந்தது; அநேக வருடங்களாக இக் கோபுரத் திற்கு மேல் கலசங்கள் வைக்கப்படவில்லை; வைத்தால் அவற்றை ஒரு பிசாசு தள்ளி விடுவதாக வதந்தி யிருந்தது. சில வருடங்களுக்கு முன் ஒரு கும்பாபிகேஷ்கத்தின்போது இக் கோபுரம் ஸ்தூபிகளாகிய சிலைகள் வைக்கப்பட்டு சரியாக்கப்பட்டது; இது 9 கிலே யுடையது; 1572-u கிருஷ்ண வீரப்ப நாயகரால் கட்டப்பட்டது. இக் கோபுரத் தின் கீழ் இதற்குக் காவலாக கருப்பண்ணசாமி கோயி லிருக்கிறது. இதற்கு வடைமாலை சாத்துகிறது. பெரிய GÖD 35 H 5f f Dj LL, மேற்கு கோபுரம் 9 கிலேயை யுடைசது 1823-இல் பாக்கிரம பாண்டியல்ை கட்டப்பட்டது. நகாரா மண்டபம் மீட்ைசி கோயிலுக்கெதிரி லுள்ளது. சுமார் 1635-ஒ அச்சுதராயரால் கட்டப்பட்டதாம். - இப் பெரிய கோயிலில் பார்க்க வேண்டிவைகள் :(1) பொற்ருமரைக்குளம்-மீட்ைசி கோயிலின் முன்புள்ளது. இதில் சங்கப்பலகை யிருந்ததாகச் சொல்வப்படுகிறது. இதன் படியில் ஓரிடத்திலிருந்து பார்த்தால் கோயிலிலுள்ள எல்ல. கோபுரங்களின் சிகரங்களும் தெரியும். இக் குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களில் 64 திருவிளே யாடல்கள் முதலியன வர்ணத்தால் 'சித்திரிக்கப்பட்டிருக் கின்றன. (2) கிளி கூண்டு மண்டபம்.இதில் பஞ்சவர்ணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/60&oldid=730454" இலிருந்து மீள்விக்கப்பட்டது