பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 கிளிகள் முதலியன வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள கருங்கற்றுரண்களில் பஞ்ச பாண்டவர்கள் முதலியோ ருடைய பெரிய சிலை உருவங்களிருக்கின்றன; மிகவும் அழகியவை. (1) முக்குறுணிப் பிள்ளையார்-மிகவும் பெரிய பிள்ளையார்; வண்டியூர் தெப்பக் குளத்திலிருந்து கண் டெடுக்கப்பட்ட தென்பர். பிள்ளையார் சதுர்த்தி தினம் மூன்று குறுணி அரசியில்ை ஒரே மோதகம் செய்யப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. (4) ஸ்வாமி கோயிலுக் கெதிரில் 16 கால் மண்டபம்; இது கிருஷ்ண வீரப்ப நாயகர் காலத்தில் கட்டப்பட்டது. இதில் முப்புரதகன மூர்த்தி, சண்டேஸ்வர அனுக்கிர மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் முதலிய சிலைகள் மிகவும் அழகிய வேலேப்பாடுள்ளவை, அன்றியும் இங்கு எதிரிலுள்ள் விரபத்ர மூர்த்தி, காளி (இக் காளிக்கு வாதாடும் பத்ரகாளி என்று பெயர்) முதலிய மிகப் பெரிய சிலை யுருவங்கள் மிகவும் அருமை யான வேலைப்பாடுள்ளவை. இவைகள் 16-ஆம் நூற் முண்டின் பிற்பகுதியில் வெட்டப்பட்டனவாக புரோபசர் ஹிராஸ் எண்ணுகிருரர். (5) ஸ்வாமி சங்கிதியின் வாயிலில் காயத்ரி சாவித்திரி மந்திரங்களின் சிலைகளிருக்கின்றன. (இவை மற்றெங்கும் கிடையா). (6) முதலி மண்டபத்திலுள்ள மோகினியின் உருவம் மிகவும் அழகியதென பார்த்தவர் களால் மதிக்கப்படுகிறது. இம் மண்டபம் 1618-u கடந்தை முதலியாரால் கட்டப்பட்டது. (7) ஆயிரக்கால் மண்டபம்.இதன் தூண்கள் ஒன்றில் யாளி வாயில் குண்டு சுழன்றுகொண்டிருக்கக் காணலாம். இங்குள்ள மன் மகன் ரதி யுருவங்கள் மிகுந்த சுந்தாமமைந்தவை. இது கிருஷ்ண வீரப்ப நாயகர் காலத்தில் சுமார் 1572-இல் கட்டப்பட்டது. (8) எல்லாம் வல்ல சித்தர் கோயில்-ஸ்வாமீ கோயிலின் உட்பிராகாரத்திலுள்ளது. விக்கிரம பாண் டியன் கட்டியது. (9) காரைக்கால் அம்மையார் சங்கிதி. சுந்தரேஸ்வரர் கோயிலின் பிராகாரத்திலுள்ளது. (10) சங்கப்புலவர்கள் வைத்திருக்கும் மண்டபம். கோயிலின் மதில் சுவர்கள் மிகவும் உன்னதமானவை. மதுரை மதில் அழகு, என்பது பழமொழியாம். இங்கு வெளிப் பிராகாரத்தில் ஒரு பெரிய கற்றுணில் பல சிறு தூண்கள் அடங்கியிருக்கின்றன ; இவைகளே முறையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/61&oldid=730455" இலிருந்து மீள்விக்கப்பட்டது