பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மருதுர்-திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம். ஸ்வாமி-கூட்லேஸ்வரர், தேவி . உமா தேவி, தாம்ரபர்ணி தீர்த்தம்; உதககதி சித்ராநதி கூடுமிடம்; ஆகவே ஸ்வாமிக்கு கூடலழகர் என்று பெயர். மல்ஹார்காட்-பூ ைஜில்லா, பம்பாய் ராஜதானி, ம்ஹாதேவர் கோயிலும், கண்டோபா கோயிலும், பாழாய்க் கிடக்கின்றன. மலே ய டிப் பட்டி :-புதுக்கோட்டை சமஸ்தானம்,சென்னை ராஜதானி; சிவாலயம், குன்றில் குடையப்பட் டிருக்கிறது. கீரனூருக்கு 8 மைல் கிழக்கு. கர்ப்பக் கிரஹம் தாழ்வாரத்தின் பின்புறமாக வாயிலைப் பார்த்தபடி அமைக்கப்படவில்லை; தாழ்வாரத்தின் பாகமே கர்ப்பக் கிா ஹ மாக மாற்றப்பட்டிருக்கிறது. ஸ்வாமி சங்கிதி கிழக்கு புறமாக இருக்கவேண்டுமென்று இவ்வண்ணம் செதுக்கப்படடது போலும் லிங்கம் வட்ட வடிவமாயது. எதிரில் நந்தி செதுக்கப்பட்டிருக்கிறது. பின்புறச் சுவர் ாக்கம் சப்தமாத்ருக்களின் உருவங்கள் செதுக்கப்பட் டிருக்கின்றன (அர்த்த சிலை உருவங்களாக). இங்குள்ள ஒரு தூணில் சண்டேஸ்வரர் விக்ரஹம் இருக்கிறது; இது பழமையான சண்டேஸ்வர மூர்த்தியாம். நடுத் தூண்களில் கல்வெட்டுகள் இருக்கின்றன. கோயில் பல்லவ நந்தி வர்மனது 16-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது; ஆகவே, கி.பி. 800-ளுத்தியதாம். கோயில் 22 அடி x 18 அடி 4.அங்குளம் x 9 அடி. கோயிலை வெட்டுவித்தவன் பெயர் விடேல் விடுகு முத்தரையன் என்பதாம். - மழபாடி:-(திரு) சென்னை ராஜதானி, திருவையாறுக்கு 23 மைல், பெரும்புலியூருக்கு 2 மைல் வட மேற்கு. மழ வர்பாடி= மழவர்கள் பாசறை. நந்தி தேவருக்குக் கலி யாணமான ஸ்தலம். உத்தரவாஹினி, ஸ்வாமி-வஜ்ரஸ்தம் பேஸ்வரர், தேவி-அழகாம்பிகை, கொள்ளிடாதி, சிவ கங்கை, லட்சுமி தீர்த்தம் - இவையிரண்டும் தற்காலம் கொள்ளிடத்தில் மூழ்கிப் போயிருப்பதாகச் சொல்லப்படு கிறது. தேவேந்திரன் பூசித்த ஸ்தலம். பிரம்மோற்சவம் மாசிமாசம். கோபுரம் 7 கிலே யுடையது. மிகவும் 9 . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/67&oldid=730461" இலிருந்து மீள்விக்கப்பட்டது