பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மஹாதேவ பெட்டா-மைசூர் ராஜ்யம் (கன்னடத்தில் பெட்டா என்ருல் மலே) மைசூருக்கு 83 மைல். கோயில் காட்டின் மத்தியிலுள்ளது. ஸ்வாமி பெயர் மஹதேஸ்வர். லிங்கத்திற்கு மைசூர் மஹாராஜா பொற் கவசம் அர்ப் பணம் செய்திருக்கிருரர். மஹாகக்தி -சென்னை ராஜதானி, நந்தியால் ஸ்டேஷ அக்கு 10 மைல். குண்டக்கல் பெஜ்வாடா ரெயில் பாதையில் காஜ-லபள்ளி ஸ்டேஷனுக்கு 8 மைல். நல்ல மலைத்தொடரின் அடியில், காட்டின் மத்தியில் சிவாலயம் உளது. கோயில் குளத்தில் மலேயூற்று நீர் பாய்கிறது. ஸ்வாமி.மஹா நந்தீஸ்வரர்-கிவராத்திரி விசேஷம். . மஹாபலிபுரம :-இதன் பூர்வீகப் பெயர் மாமல்லபுரம். சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, திருக்கழுக் குன்றத்திலிருந்து 23 மைல். சென்னையிலிருந்து 32 மைல். மஹா மல்லன் எனும் பல்லவ அரசன் ஆண்ட இடமாத லால் இப் பெயர் வந்திருக்கலாம். சிவாலயம் கடற்கரைக் கோயில் (690-710) இரண்டாம் நரசிம்ம வர்மன் அல்லது ராஜசிம்மல்ை ஏழாம் நூற்ருண்டில் இக் கோயில் கட்டப் பட்டது. இதற்கு கஷத்திரிய பல்லவேஸ்வாம் என்று பெயர். கோயிலில் தற்காலம் பூஜையில்லை. பெரிய லிங்கம் பின்னப்பட்டிருக்கிறது; இதற்கு கஷத்திரிய சிம்ம பல்லவேஸ்வரர் என்று பெயர். துவஜஸ்தம்பம் சமுத்தி, ரத்திலிருக்கிறது, 11 அடி உயரம். அலைகள் கோயிலுக்குள் இராக்காலங்களில் மோதுகின்றன. இக் கோயில் 8-ஆம் நூற்றுண்டில் கட்டப்பட்டதென துப்ரெயில் துரை எண்ணுகிருர். இக் கோயில் கிழக்கு பார்த்தது. இதைப் பார்த்துதான் தென் இந்தியாவிலுள்ள சிவாலயங்கள் கட்டப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். லிங்கம் 17 பட்ட்ைக்ள் உடையது. கறுப்புக் கல்லாலாயது; சுற் றளவு 6 அடி 9 அங்குலம். லிங்கத்தின் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தி செதுக்கப்பட்டிருக்கிறது. கோயி அக்குப் பின்புறம் ஒரு சிறு சிவாலயமுண்டு. இதற்கு ராஜசிம்ம பல்லேஸ்வரர் கோயில் என்று பெயர். இதிலும் தற்காலம் பூஜையில்லே. இங்கும் சோமாஸ்கந்த மூர்த்தி செதுக்கப்பட்டிருக்கிறது. காலம் 690-710. இங்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/70&oldid=730465" இலிருந்து மீள்விக்கப்பட்டது