பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மற்ற, சிவாலயங்கள்: (1) தர்மராஜன் ரகம். இது ரதமல்ல, சிவாலயமாகவே வெட்டப்ப்ட்டதாம். 28 அடி சதுரம், 85 அடி உயரம். ஒரே கல்லில் வெட்டப்பட்டது. பெளத்த விஹாரங்களைப்போல் நிர்மிக்கப்பட்ட தென பெர்கூசன் கூறுகிறர். இது 4 மாடிகள் உடையது, கி.பி. 670-700 ஆண்டில் ஆண்ட ராஜ சிம்மன் எனும் பல்லவ அரசனல் வெட்டப்பட்டது. நரசிம்மவர்மன், நரசிம்மன், நரசிம்ம விஷ்ணு, காலகாலன், அக்யாந்த காமன், ரீபான், ரீகிதி, அதிரணசண்டன் முதலிய பிருதுப் பெயர்களுடையவன். இக் கோயிலின் மூன்ரும் மாடியில் கிழக்கில், இக் கோயிலின் பெயர் அத்யாந்த பல்லவேஸ்வரம் என்று கூறப்பட்டிருக்கிறது, அதாவது அத்யாந்த காமன் என்பவனல் கட்டப்பட்டதாம். பரம சிவத்தின் உருவம் சோமாஸ்கந்த மூர்த்தியாக நடுவில் இருக்கிறது; பக்கலில் பிரம்ம விஷ்ணுவின் உருவங் களும் இருக்கின்றன. கோயிலில் பூஜையில்லே. இங்கு ஆதியில் சந்தன மரத்தாலாகிய திராவிகள் இருந்தன. (8) அர்ஜுனன் ரதம்-இதுவும் சிவாலயமாக ஆரம்பிக்கப் பட்டு முற்றுப் படவில்லை. (4) தற்காலம் கணேசர் ரதம் என்று அழைக்கப்படும் கட்டடமும் ஆதியில் சிவாலயமாய்க் கட்டப்பட்டதேயாம். இக் கோயிலின் கல்வெட்டில் இது. பல்லவ அரசனகிய அத்யாந்தகாமரணஜெயல்ை சிவாலய மாகக் கடடப்பட்டதென அறிகிருேம், 3 மாடிகளே யுடையது; உச்சியில் திரிசூலங்கள் செதுக்கப்பட்டிருக் கின்றன. 670-700 கி. பி. இதிலிருந்த சிவலிங்கம் சீமைக்குக் கொண்டுபோகப்பட்டது. பிறகு காலியா யிருந்த கோயிலில் விக்னேஸ்வரரை எழுந்தருளப்பண்ணி யிருக்கின்றனர். இங்குள்ள குகைக் கோயில்களும் ரதங் களும் 625-650-ல் ஆண்ட முதலாம் நரசிம்ம வர்மல்ை ஆரம்பிக்கப்பட்டு 675-ல் ஆண்ட பரமேஸ்வர வர்மல்ை முடிக்கப்பட்டனவென்று தாப்ரெயில் துரை எண்ணுகிரு.ர். (5) இவ்வூரின் வடக்கில் முகுந்த நயனர் கோயில், சிவா லயம்; ரா ஜ சிம்மன் மகன் மஹேந்திர்னல் கட்டப் பட்டது. லிங்கத் தி ன் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தி செதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 8-ஆம் நாம் முண்டில் கிர்மாணிக்கப்பட்டது. கிராம சத்திரத்திற்கு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/71&oldid=730466" இலிருந்து மீள்விக்கப்பட்டது