பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிறுமலை இது ரிஸ்யஸ்ரிங்கர் வசித்த மலை என்பர். சிவால யம் 15 அடி சதுரம், ஸ்வாமி.மகாதேவர்; தற்காலக்கோயில் சுமார் 58 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது. இங்கு பழைய கோயில் ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மாடத்துக்கோயில்:- புதுக்கோட்டை சமஸ்தானம், நாங்குபட்டி யருகிலிருக்கிறது. பழைய சிவாலயம்.இங்கு சப்தரிஷிகளின் சிலைகள் உள. இங்குள்ள கல்வெட்டு களால் இக்கோயில் சேர கடம்பராயர் என்பவரால் கட்டப் பட்டதாக அறிகிறுேம். மாடவிளாகம் :- சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா; மஹாபலிபுரத்திலிருந்து 5 மைல், திருக்காலீஸ்வரர் கோயில். மாடி :-மைசூர் ராஜ்யம், சிவாலயம்; ஸ்வாமி-ராமேஸ் வரர்; கெம்பகெளடருடைய குலதெய்வம், இங்குள்ள உற் சவ மூர்த்திக்கு இரண்டு தேவிகள், பார்வதி கங்கை. இதற்கு 8 மைல் துரத்தில் சோமேஸ்வரர் கோயில்-1712ஞ் மும்மடி கெம்பவிரகெளடரால் கட்டப்பட்ட சிவாலயம் கோயில் வடக்கு பார்த்தது. மாணிக்கககர் :-குல்பர்கா ரெயில் ஸ்டேஷனிலிருந்து 33 மைல்; மத்ய இந்தியா, சிவாலயம். ஸ்வாமி-சந்திரபரமேஸ் வரர், சங்கமேஸ்வரர், தேவி-பார்வதி. மாணிகுழி :-(திரு) திருமாண்டகுழ எனறும விபயா; தென் ஆற்காடு ஜில்லா, கூடலூர் தாலுகா, சென்னே ராஜ தானி; கூடலூர் ஸ்டேஷனுக்கு 3 மைல் மேற்கு, வாமன புரீஸ்வரர் கோயில்; ஸ்வாமி-மாணிக்கமேனிவரதேஸ்வரர், தேவி. மாணிக்கவல்லியம்மை, கொன்றை விருட்சம், மாணிக்க தீர்த்தம், பெண்ணேகதி, விஷ்ணு மாணிவடிவாக (வாமனுவதாரமாக) பூஜிக்க ஸ்தலம்; ஸ்வாமி வணிகருக்கு உதவிபுரிந்தபடியால் உதவிநாயகா என்றும் பெயர். கல் வெட்டுகளில் திருமாணிக்குழியாளுடையார் என்று ஸ்வாமி பெயர் இருக்கிறது. கோயிலில் பல கல்வெட்டு கள் உள. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/75&oldid=730470" இலிருந்து மீள்விக்கப்பட்டது