பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பாகன்; இங்கு தியூல்மார் கிராமத்தில் ஒரு சிறு குன்றின் பேரில் காமேஸ்வர்நாத் கோயில்; இதில் ஆயிர முகலிங்கம் உளது. கோயில் ஒரிஸ்ஸா கட்டடம். மிண்டிகல் :-மைசூர் ராஜ்யம், கோலார் ஜில்லா; சிந்தா மணிக்கு அருகிலுள்ளது. சோமேஸ்வர் கோயில். மிராஜ்-பம்பாய் ராஜகானி, ஜூர்ை சமஸ்தானம் மிராஜ் றெயில் ஸ்டேஷன்; இங்குள்ள சிவாலயங்கள். (1) சுவாமி மார்க்கண்டேஸ்வரர்,தேவி_அன்னபூரணி, கோதர் வரி தீர்த்தம், கோயில் றெயில் ஸ்டேஷனிலிருந்து 3 மைல் (2) காவ்தர் கிராமம், மஹாதேவர் கோயில் பழையது. (3) ம்தோல் மஹாலிங்பூர்,மஹாலிங்கேஸ்வர் கோயில். மிருதகேஸ்வரம் -வட இந்தியா,சுயம்புலிங்கம், சுவாமி. சூட்சுமர். மிலாத்துர் :-சென்னை ராஜதானி, றெயில் ஸ்டேஷன்; திட்டைக்கு 4 மைல் கிழக்கு சிவாலயம்; சுவாமி உன்னத புரீஸ்வரர் சோழக்கட்டடம் 150 +120 அடி விஸ்தீரணம்; ஒரேபிராகாரமுடையது. பிரளயகாலத்தில் தண்ணீர் மட்டத் தின்பேரில் கோயில் இருந்தபடியால் உன்னதபுரி என்று பெயர்வந்ததென்பர்; கோயிலில் 1118-1135u ஆண்ட விக்ரமசோழன் காலத்திய கல்வெட்டொன்றுளது. மிஸ்ரிக் -வட இந்தியா, சீத்ாபூர் ரெயில் ஸ்டேஷனி லிருந்து 18 மைல், சிவாலயம். மீயச்சூர் :-(திரு) பேரளம் ஸ்டேஷனுக்கு 1 மைல் மேற்கு. சென்னை ராஜதானி, சூரியன் பரமசிவத்தையும் பார்வதி தேவியையும் யானைமீது ஆரோஹணிக்கச் செய்து பூசித்த ஸ்தலம். வருணன் பூசித்த_ஸ்தலம். கோயில் விமானம் யானை உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கிறது. சுவாமி - முயற்சிநாதேஸ்வரர், தேவி - செளந்தரநாயகி, வில்வ விருட்சம், தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, கங்கா கடபம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. மியச்சூர் இளங்கோயில்:-இது மேற்கண்ட பெரிய கோயிலிலடங்கியது. வடக்குப் பிராகாரத்திலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/81&oldid=730477" இலிருந்து மீள்விக்கப்பட்டது