பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

தேவரால் முடிக்கப்பட்டது; 890x435 அடி, ஸ்வாமி சக்கிதி யும் தேவி சந்நிதியும் மதுரையிலிருப்ப்துபோல் அக்கம் பக்கமா யிருக்கின்றன. இரண்டும் கிழக்கு பார்க்கவை: சேது மாதவர் கோயிலும் (இங்கிருக்கும் விஷ்ணு ஆலயம்) கணேசர் சிலையும் ஒருவிக் மன் கல்லால் ஆக்கப்பட் டவை, இவை உதிர்ந்துகொண்டு வருகின்றன. பழ4 கோபுரங்கள் இலேசான பவழப் பாறைகளால் கட்_ப் பட்டவை. சர்வ் தீர்த்தம் எனும் கிணற்றினின்றும் கிழே தெற்கு முகமாக ஒரு வழி போகிறது. கள தீர்த்தம், நீல தீர்த்தம்-இவைகள் அருகிலிருக்கும் கோயில்கள் பழமை யானவை. இங்குள்ள சொக்கட்ட்ான் மண்டபம் எதும் சதுர வடிவான கண்டபம் பார்க்கத்தக்கது. 1623-1845 வருடங்களிற் கட்டப்பட்டது. இதன் மொத்த விஸ்தீரனம் சும்ார் 4000 அடியாம் ; அகலம் 17 அடி முதல் 21 அடி வரையில், உயரம் சுமார் 30 அடி, ஒவ்வொரு தானும் சுமார் 12 அடி உயரம்; 5 அடி மேட்ையின் மீது வைக்கப் பட்டிருக்கிற்து. இதைப்ப்ேர்ன்ற பிராகார மண்டபம் இந்தியாவிலே வேறு கிடையாதென்னலாம். இப்பிராகார மண்டபத்தில் ஸ்வாமி எழுந்தருளும்போது காட்சி மிகவும் அழகா யிருக்கும். கோயிலின் மண்டபங்களிலும், காரங்களிலும் ராமநாத் சேதுபதிகளின் உருவங்கள் கிர்மாணிக்கப்பட் டிருக்கின்றன. கோயிலில் ஆதியில் கருங்கல்லிற்ை கட்டப்பட்ட கட்டடங்களுக்கு கருங் கற்கள் சிங்களத்திலிருந்து கொண்டுவரப்பட்டத்ாக் எண்ணப்படு கிறது. பிறகு கட்டப்பட்ட பாகங்களெல்லாம் மணற் கல்லாலானவை. உள் பிராகாரம் மதுரை நாயகர்களால் கட்டப்பட்டது. வெளி மண்டபம் ராமகாத சேதுபதியால் கட்டப்பட்டது. கோபுரங்களில் மேற்கு கோபுரம் மாத்தி ாம் பூர்த்தியாயிருக்கிறது ; மற்றவைகள் அரைகுறையா யிருக்கின்றன. வெளி மதில் 612x868 அடி. மேற்கி லிருந்து உட்புறம் போகும்போது வலதுபுற மிருக்கும் தோட்டத்திலுள்ள விமானம் 11-ஆம் நூற்ருண்டிற் கட்டப்பட்டது : 50 x 80x40 அடி. கோயிலிலுள்ள சிறிய விமானம் இக்காலக் கில் கட்டப்பட்டதாம். கோயிலுக்கு சுமார் 80 லட்சம் ஸ்திதியுண்டு. மாசி மாதம் பிரம்மோற் சவம், ஆடிமாதம் அம்மன் உற்சவம், அம்மன் தபசி: திருக்கலியாணம், விசேஷம். தினம் அர்த்தஜாம பள்ளி ய ை உற்சவம் பார்க்கத்தக்கது. ராமநாதஸ்வாமி கர்ப் பக் கிரஹத்தில் பல்கல்வெட்டுகள் உள. கோயிலுக்குள் மாதவ புஷ்கரிணி என்று ஒரு தீர்த்தம் உண்டு. இங்கு 金

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/15&oldid=1034640" இலிருந்து மீள்விக்கப்பட்டது