பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

荡器 ஹளபீடு-ஹலபீடு என்றும் அழைக்கப் படுகிறது. ஹளேய பீடு சரியான பெயர். கன்னட ப்ாஷையில் பழய இருப்பிடம் என்று பொருள் படும், மைசூர் ராஜ்யத்தி அள்ளது. பூணு ரெயில் பாதையில் பாண வரம் ஸ்டேஷ லுக்கு 20 மைல் தெற்கு. இதன் பழய பெயர் தொாசமுத் திரம் (துவார சமுத்திரம் என்றும் அழைக்கப்பட்டது) இங்குள்ள சிவாலயங்கள் (1) ஹொய்சலேஸ்வரர் கோயில் -இது இரட்டைக் கோயில், இரண்டு சங்கிதிகளுண்டு : ஒவ்வொன்றிலும் சிவலிங்கம்; ஒவ்வொன்றிற்கும் எதிரில் பெரிய மண்டபத்தில் கந்தி புண்டு. ஒருவிங்கம் விஷ்ணு வர்த்தனராலும், மற்முென்று அவர் மனைவியாகிய சாந்தா அல்லது சாக்தளா தேவியாலும் பிரதிஷ்டை செய்யப் பட்டது. கோயில் வடக்கு தெற்கு 160-அடி, கிழக்கு மேற்கு 122 அடி, உயரம் 25 அடி மேடைக்கு மேல் கீழ் மட்டம் அல்லது மேடை சுமார் 5 அல்லது 6 அடி உயரம். கோயில் 122 u ஆரம்பிக்கப்பட்டது; முற்றிலும் முடிக் க்ப் படவில்லை. விமானங்கள் கட்டப்படுமுன் 1810u மாலிக்காபுர் எனும் மகம்மதியர் தலைவன் கையிற் சிக்கி ைது; அவர்கள் இங்குள்ள சில அழகிய கிலேஉருவங்களைப் பாழாக்கி யிருக்கின்றனர். கோயிலின் அடிமட்டம் கட்சத்திரத்தைப் போல் கோணல்கள் உடையது; இதற்கு மேல் வரிசை யானைகள்; இவை 10 அடி சுற்றளவிலும் செதுக்கப்பட் டிருக்கின்றன; சுமார் 2000 இருக்கலாம்; இவை ஒவ்வொன்றும் ஒரு கிலையில் செதுக்கப் பட்டிருக் கிறது; ஒன்றைப்போல் மற்றென்று கிடையாது. இதற்கு மேல் வரிசை சார் துலங்கள்; அதற்குமேல் அழகிய கொடி வேலை; அதற்குமேல் குதிரை வீரர்கள் வரிசை அதற்குமேல் கொடி வேலை; அதற்குமேல் ராமாயண பாரதக் கதைகளின் சில்பங்கள்; அதற்கு மேல்வரிசை மிருக பட்சிகளுடைய உருவங்கள்; அதற்குமேல் மனித உருவங்கள், தெய்வச் சிலைகள். பக்கங்களில் அழகிய பலகணிகள்; நடுவில் தேவதைகளின் உருவங்களும் அப்சாஸ்திரிகளின் உருவங்களும் இருக்கின்றன். இங்கு இந்து மத தேவதைகளின் எல்லா உருவங்களையும் காண லாம், சைவம் வைஷ்ணவம் என்கிறபேதம் கிடையாது.இப் படிப்பட்ட நுட்பமான சில்ப வேலை உலகில் வேறெங்கும் கிடையாது என்று பெர்கூசன் துரை புகழ்ந்திருக்கிருந். ஒவ்வொன்றும் பார்க்கத் தகுந்தது; ஒரு சுருள் வேலை யைப் போல் மற்ருென்று கிடையாது. சிறு விமானங் களில் (Canopy) ஒன்றைப்போல் மற்றென்று கிடையாது. 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/55&oldid=1034681" இலிருந்து மீள்விக்கப்பட்டது