பக்கம்:Siva Temple Architecture etc..pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

 நாளில் லங்கையைக் கொளுத்தினர் என்று கூறியிருப்பது ஆசாத்தியமான காரியமல்ல!)

பௌத்த ஜைன ஆலயங்கள் சென்னை ராஜதானியில் ஆதிகாலத்தில் இருந்தன என்பதற்குச் சந்தேகமில்லை; மணிமேகலை முதலிய பூர்வீக தமிழ் நூல்களினின்றும் அக்காலத்தில் சைவ வைஷ்ணவ ஆலயங்கள் இங்கிருந்தன என்று நாம் ஸ்திரமாய்க் கூறலாம். அவைகளுக்குப் பெரும்பாலும் கோட்டங்கள் என்று பெயராம். (தற்காலமும் காஞ்சீபுரத்தில் குமரகோட்டம் எனும் சுப்பிரமணியர் கோயிலிருப்பதை நோக்குக). திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசுகள், முதலிய சைவ சமயாசாரிகள் காலத்திலும் வைஷ்ணவ ஆழ்வார்கள் காலத்திலும், ஹிந்து கோயில்கள் பல இருந்தன் என்பதற்குச் சந்தேகமில்லை. பல நூற்றுக்கணக்கான இக்கோயில்களெல்லாம் பெரும்பாலும், மரத்தாலும், சுண்ணாம்பினாலும், கட்டப்பட்டவை என்று நாம் அறிகிறோம் ; இவைகளெல்லாம் மரத்தாலாகிய திராவிட சில்பப் பகுதியைச் சார்ந்தவை. இவைகளெல்லாம், வெயில், மழை, தீ, முதலியவைகளால் அழிந்துபோக, எஞ்சியவை சுமார் ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களால் பெரும்பாலும் புதுப்பிக்கப்பட்டதற்கு சான்றாக, நமக்கு ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது. சென்னை ராஜதானியில், செங்கல்பட்டு ஜில்லாவில் இருக்கும், மண்டகப்பட்டி எனும் கிராமத்தில், ஓர் குகைக்கோயிலில் உள்ள கல்வெட்டில், இவ்வாறு கூறப்பட்டுளது- "விசித்திர சித்தனான் நான், பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு என்ற மூன்று மூர்த்திகளுக்கும் கோயில், செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு, இல்லாமலே செய்வித்தேன்" என்று பொருள்படும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது. விசித்திரசித்தன் என்பது பல்லவ அரசனான் மஹேந்திரவர்மனுடைய மற்றொரு பெயராகும்; இவனது காலம் ஏழாம் நூற்றாண்டு.

மேற்குறித்த மரக் கோயில்கள், எப்படி இருந்தன என்று நாம் உறுதியாக கூறுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், தற்காலம் மலேயாள தேசத்திலிருக்கும், சில மரக் கோயில்களைப் போல்தான் இருந்திருக்க வேண்டுமென்று ஊகிப்பதற்கு இடமுண்டு. இக் கோயில்கள் கருங்கல்லினாலும், மரத்தாலும் ஆன அஸ்திவாரத்தின்மீது, மேற்பாகமெல்லாம் மரத்தால் கட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/11&oldid=1293817" இலிருந்து மீள்விக்கப்பட்டது