பக்கம்:Siva Temple Architecture etc..pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சில கோயில்களைக் கூறலாம். இங்கு சில இடங்களில் கஜலட்சுமியின் உருவம் வெட்டப்பட்டிருக்கிறது உண்மையே; நாம் குறிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பிற்காலத்திய சிவாலயங்களில் பரமசிவத்தின் சக்தி ஸ்வரூபமாகிய பார்வதி தேவிக்கு, கோயில்கள் தற்காலம் பிரத்யேகமாயிருப்பதுபோல், ஆதிகாலக் கோயில்களில் இல்லை என்பதேயாம். சிவாலயங்களில் ஒரே மூலஸ்தானம் தான் இருந்தது; ஸ்வாமிக்கும் அம்மனுக்கு இரண்டு மூலஸ்தானங்கள் கிடையாது. இதற்கு உதாரணமாக, மகாபலிபுரக் கரைக்கோயில், மேலகிட்டி சிவாலயம், பத்ததாக்கலிலுள்ள விருபாட்சர் கோயில், சங்கமேஷ்வர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், முதலியவற்றைக் கூறலாம். மேற்சொன்ன கோயில்களில் ஒன்றாகிய விரூபாட்சர் கோயிலானது, லோகமாதேவி, என்னும் ஓர் அரசியால் கட்டப்பட்டபோதிலும், அதில் அம்மன் சந்நிதி பிரத்தியேகமாயில்லை யென்பது முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது. மைசூர் ராஜ்யத்தில் ஹலபேட் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்தில் இரண்டு சிவ சந்நிதிகளுள; ஒரு ஸ்வாமிக்கு ஹொய்சர லேஸ்வரரென்றும், மற்றொன்றிற்கு சாந்தாளேஸ்வரர் என்றும் பெயர் ; இரண்டும் சிவ சந்நிதிகளே, அம்மனுக்கு இக்கோயிலில் பிரத்யேகமாக சந்நிதி கிடையாது. இங்கும் சாந்தாளேஸ்வார் சந்நிதி சாந்தாதேவி எனும் அரசியால் கட்டப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

அன்றியும் பூர்வீக சோழ கட்டிட சிவாலயங்களிலும் ஆதியில் அம்மனுக்கும் பிரத்யேகமாக மூலஸ்தானம் கட்டப்படவில்லையெனத் தெரிகிறது. இதற்கு உதாரணமாக, ஸ்ரீ காஞ்சீபுர ஏகாம்பரநாதர் கோயிலைக் கூறலாம்; காஞ்சீபுரம் இந்தியாவில் வெகுகாலத்திற்கு முன்பே பிரசித்திபெற்ற 'சப்த புரிகளி லொன்றாம். அங்கு சிவாலயங்கள் ஆதிகாலத்திலேயே இருந்திருக்கவேண்டும்; அப்படி யிருந்தும், ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்மனுக்கு மூலஸ்தானக் கோயில் கிடையாது; காமாட்சி அம்மனுக்கு உற்சவ விக்ரஹம் இருக்கிறது; மூல விக்ரஹம் கிடையாது. இவ்வூரிலுள்ள பழய கோயில்களாகிய, ஐராவதேஸ்வரர் கோயில், மாதங்கேஸ்வரர் கோயில், முக்தீஸ்வரர் கோயில், முதலியவற்றுள், அம்மன் சந்நிதிக்கு இடம் வேறாக ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/16&oldid=1293864" இலிருந்து மீள்விக்கப்பட்டது