பக்கம்:Siva Temple Architecture etc..pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

படுத்தப்படவில்லை. திருக்கழுக்குன்றத்து, மலைமீதிருக்கும் வேதகிரீஸ்வருக்கு, அம்மன் சந்நிதி அங்கு கிடையாது என்பதையும் நோக்கவும்.

சில பூர்வீக சோழ சிவாலயங்களில் ஆதியில் நிர்மானிக்கப்பட்டபோது அம்மன் சந்நிதியே யில்லாது, பிறகு கட்டப்பட்டிருக்கின்றது. இதற்கு சில உதாரணங்கள் (1) சுமார் 1012௵ கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலில், பிறகுதான் அம்மன் சந்நிதி கட்டப்பட்டது. (2) சிதம்பரத்திலும் தற்காலத்திய அம்மன் சந்நிதி பிறகுதான் கட்டப்பட்டதாம். (3) சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரிலும் அப்படியே. மேற்கூறிய கோயில்களில் ஸ்வாமி கர்ப்பக்கிரஹத்தின் சில்பத்தையும் அம்மன் சந்நிதி சில்பத்தையும் ஆராய்ந்து பார்த்தால் இது நன்கு விளங்கும்.

பிற்காலத்தில் ஏற்பட்ட சிவாலயங்களிலெல்லாம் அம்மனுக்குப் பிரத்யேகமாக ஆலயமில்லாத கோயிலே கிடையாது என்று கூறலாம். இக்காலத்திய சிவாலயங்களிளெல்லாம் ஸ்வாமி சந்நிதி கிழக்குப் பார்த்ததாயும் அம்மன் சந்நிதி தெற்கு பார்த்ததாயும் இருக்கும். இப்படிக்கில்லா விட்டால், இதற்கு ஏதாவது காரணம் நாம் சாதாரணமாகக் கூற முடியும். இதற்கு ஒரு உதாரணமாக, பூர்வீக கோயில் அழிக்கப்பட்டு, சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட திருமயிலை கபாலீஸ்வரர் கோயிலைக் கூறலாம். இங்கு ஸ்வாமி சந்நிதி மேற்கு பார்த்ததா யிருப்பதை கவனிக்க.

சில பெரிய சிவாலயங்களில் ஸ்வாமி சந்நிதியும் அம்மன் சந்நிதியும் அக்கம்பக்கமாய், அதாவது இரண்டும் ஒரே திக்கு நோக்கியவைகளாய்க் கட்டப்பட்டிருக்கினறன. மதுரை, திருவாரூர், ராமேஸ்வரம் முதலிய ஸ்தலங்களில் இப்படித்தானிருக்கிறது.

வட இந்தியாவிலுள்ள சிவாலயங்களில், அம்மனுக்குப் பெரும்பாலும் சந்நிதியே கிடையாது என்று கூறலாம்: காளி, துர்க்கை, கோயில்கள் பல இருந்தபோதிலும் சிவாலயங்களில் அம்மன், சந்நிதி கிடையாது. மிகவும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வேஸ்வரர் கோயிலும் விசாலாட்சி சந்நிதி கிடையாது; அது வேறோர் இடத்தில் தனியாக சிவபக்தர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/17&oldid=1293870" இலிருந்து மீள்விக்கப்பட்டது