பக்கம்:Siva Temple Architecture etc..pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

டிருக்கிறது. மொத்தத்தில் பூர்வீக பல்லவ சிவாலயங்களில் விக்னேஸ்வரர் சிலையே கிடையாது எனச்சொல்லலாம்.

தற்காலத்திய எல்லாச் சிவாலயங்களிலும் ஸ்வாமி கர்ப்ப்க் கிரஹத்திற்கு அருகாமையில், வெளியில் வடக்குப் பாரிசம் சண்டேஸ்வரருக்கு சிறு கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை இதை வாசித்கும் சிவ நேயர்கள் அனைவரும் அறிவார்கள். இதுவும் பிற்காலம் வந்த வழக்கமாம். பல்லவர்கள் காலத்தில் கட்டிய சிவாலயங்களில் சண்டேஸ்வர மூர்த்தியே கிடையாதென்னலாம்; அப்படி ஏதாவது ஏகதேசமாயிருந்தாலும், அவருக்குப் பிரத்யேகமாக சந்நிதி கிடையாது என்று கூறலாம்.

இங்ஙனமே, நடராஜப் பெருமாலுக்கும், தியாகேசப் பெருமானுக்கும் பிரத்யேக சந்நிதிகள் பிற்காலத்தில்தான் உண்டானவை என்று கூற இடமுண்டு.

இனி, தற்காலத்தில் கட்டப்படும் சிவாலயங்களின் சில்ப முறையை கவனிப்போம். தற்கால சிவாலயங்களெல்லாம் கிழக்கு நோக்கியவைகளாயிருக்கும் ; இது சில்ப சாஸ்திர்த்திலும் சைவாகமங்களிலும் குறித்த முறையாம். அப்படி யில்லாது வேறு எத்திக்கையாவது நோக்கியிருந்தால் அதற்கு ஏதாவது அவசியமான காரணம் இருக்கவேண்டும். சிவாலயத்தின் முக்கிய வாயிலுக்கு எதிராக, பெரிய கோயில்களில் 16 கால் மண்டபமும் சிறிய கோயில்களில் 4 கால் மண்டபமும் அமைத்திருக்கும். இது முக்கியமாக ஸ்வாமியின் திருவிழாக் காலத்தில் தீபாராதனைக்காக ஸ்வாமி தங்குவதற்காகக் கட்டப்பட்டதாம். இதற்கு உதாரணமாக பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பர நாதர் கோயில் தெற்கு கோபுரத்திற்கெதிரிலுள்ள 16 கால் மண்டபத்தைக் கூறலாம். கோயிலின் கிழக்கு வாயிலின் பேரில், சாதாரணமாக பெரிய கோபுரமிருக்கும். பெரிய கோயில்களில் நான்கு வாயில்களிலும், நான்கு கோபுரங்கள் இருக்கும்; உதாரணமாக சிதம்பரத்திலுள்ள நான்கு கோபுரங்களையும் கூறலாம். சில கோயில்களில் இரண்டு கோபுரங்கள்தானுண்டு; இன்னும் சில கோயில்களில் ஒரே கோபுரமுண்டு. கிழக்கு கோபுரவாயிலின் மூலமாக உள்ளே நுழைந்தால், ஒரே பிரகாரமுடைய கோயில்களில், வாயிலுக்கு நேராக் துவஜஸ்தம் இருக்கும்; அதற்குப் பின்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/19&oldid=1293875" இலிருந்து மீள்விக்கப்பட்டது